யூகோ வங்கி | Kalvimalar - News

யூகோ வங்கி

எழுத்தின் அளவு :

கல்விக் கடன் தொகை அளவு:

  • இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
  • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

செலுத்த வேண்டிய முன்தொகை:

  1. நான்கு லட்சம் ரூபாய் வரை-எதுவுமில்லை
  2. நான்கு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக- இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ஐந்து சதவீதம்; வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15 சதவீதம்

வட்டி விகிதம்:
நான்கு லட்சம் ரூபாய் வரை: பி.பி.எல்.ஆர்., BR+3.00%
நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல்:  பி.பி.எல்.ஆர்., BR+3.75%
பி.பி.எல்.ஆர்., - பேங்க் பிரைம் லெண்டிங் ரேட்

கடனை திருப்பி செலுத்தும் முறை:
படிப்பை முடித்த ஒரு ஆண்டிற்கு பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்திலிருந்து(இரண்டில் எது முதலில் வருகிறதோ) கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

உத்தரவாதம்:
நான்கு லட்சம் ரூபாய் வரை: சொத்து பிணை தேவையில்லை.
நான்கு லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை: சொத்துப்பிணை, கடன்தொகையை திருப்பி செலுத்துவதாக பெற்றோர், மாணவர் அல்லது மூன்றாவது நபர் ஒப்புதல்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us