காவ்யா (பிளஸ் 2 தேர்வு - பிற மொழி பிரிவில் மாநில முதலிடம்) - 2013 | Kalvimalar - News

காவ்யா (பிளஸ் 2 தேர்வு - பிற மொழி பிரிவில் மாநில முதலிடம்) - 2013

எழுத்தின் அளவு :

பிற மொழிப்பாடத்தை முதலாவதாக எடுத்து படித்து, 1192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேறிய காவ்யா கூறியது,

எனக்கு கிடைத்த சிறப்பான கோச்சிங் மிக முக்கியமானது. இந்த கோச்சிங் வகுப்பிற்கு, தினந்தோறும் காலை வேளையில் மாணவர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அவர்கள் அன்றைய தினம் பள்ளிக்கு விடுமுறை எடுத்தாலும் கூட, கோச்சிங் வகுப்பால்தான் அனைத்தையும் சிறப்பாக கற்றுக்கொள்ள முடிந்தது. வெறும் புத்தகங்களில் இருப்பதை மட்டுமே கற்றுக்கொடுக்காமல், பாடத்திற்கு வெளியேயும் விஷயங்களை கற்றுக்கொடுத்தார்கள். எனது ஆசிரியை எலிசபெத் செய்த உதவியை மறக்க முடியாது.

பொதுவாக, மாணவர்களுக்கு டெஸ்ட் வைப்பதில் பல நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர்கள் மற்றும் நன்றாக படிக்காத மாணவர்கள் என்று பிரித்து பார்க்காமல், அனைவருக்கும் சிறப்பான உற்சாகம் கொடுக்க வேண்டும்.

நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியம். படித்ததை எழுதிப்பார்க்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம். ஆனால், அந்தந்த நேரத்தில் படிப்பதை படித்துவிட வேண்டும். நாம் எழுதும் மாதிரி தேர்வுகளின் விடைத் தாள்களை பார்த்து, நமது நிறை-குறைகளை தெரிந்துகொண்டு சரிசெய்ய வேண்டும். ஐயோ, படிக்க வேண்டுமே என்ற மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ளாமல், இயல்பாக படிக்க வேண்டும். என் வீட்டைப் பொறுத்தவரை, என் தந்தை என்னை நச்சரிக்காமல், சுதந்திரம் கொடுத்தார்.

எதிர்கால ஆசை

எனக்கு CA படிக்க வேண்டும் என்ற தணியாத ஆசை உண்டு. ஏனெனில், எனது குடும்பத்தில், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளனர். அவர்களின் பணி அனுபவம் பற்றி நான் அறிவேன். எனக்கு, தனிப்பட்ட முறையில் கணக்கியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் ஆர்வம் உண்டு. மேலும், CA முடித்தவர்களுக்கு, இந்த சமூகத்தில் தனி மரியாதை உண்டு. இதன் காரணமாகவே, நான் CA படிக்க விரும்புகிறேன்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us