தற்போது ஐ.டி., பிரிவில் அப்ளைட் சயின்ஸ் படிக்கிறேன். இதற்குப் பின் எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்சி., இவற்றில் எதில் சேரலாம்? | Kalvimalar - News

தற்போது ஐ.டி., பிரிவில் அப்ளைட் சயின்ஸ் படிக்கிறேன். இதற்குப் பின் எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்சி., இவற்றில் எதில் சேரலாம்?நவம்பர் 15,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஐ.டி., பிரிவில் அப்ளைட் சயின்ஸ் படிக்கும் நீங்கள் பொதுவாக சாப்ட்வேர்களில் சிறப்பான திறன் பெற்றிருப்பது மிக அவசியம்.

இதை பட்டப்படிப்பு முடிக்கும்போதே சேர்த்துப் பெறுவதும் முக்கியம். எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்சி., இவற்றில் எதில் சேரலாம் என்று நம்மால் முடிவெடுக்க முடிந்தால் அந்த படிப்பில் தான் அனைவரும் சேருவார்கள் இல்லையா? ஒவ்வொரு படிப்புக்கும் என தனி மதிப்பும் தேவையும் இருக்கிறது.

 

ஆனால் குறிப்பிட்ட படிப்பை முடிப்பதால் மட்டுமே வேலை கிடைக்கும் என நம்ப வேண்டாம். எங்கு சென்று படிக்க நமது குடும்பச் சூழல் நம்மை அனுமதிக்கும், எவ்வளவு செலவழிக்க முடியும், நமது அடிப்படை ஆர்வம் எதில் என்பது போன்ற விஷயங்களின் அடிப்படையில் நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us