அறிவோம் எப்.டி.டி.ஐ., | Kalvimalar - News

அறிவோம் எப்.டி.டி.ஐ.,பிப்ரவரி 21,2022,11:54 IST

எழுத்தின் அளவு :

காலணி வடிவமைப்பிற்கு என்றே பிரத்யேகமாக, சென்னை உட்பட இந்திய முழுவதிலும் 8 இடங்களில், ‘புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்’ செயல்படுகிறது. இவற்றில் சேர்க்கை பெற, ஆல் இந்தியா செலக்சன் டெஸ்ட் (ஏ.ஐ.எஸ்.டி.,) எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.



கல்வி வளாகங்கள்: நொய்டா, பர்சத்கஞ்ச், சென்னை, கொல்கத்தா, ரோடக், ஜோத்பூர், சிந்த்வாரா, குணா, அங்கலேஷ்வர், பாட்னா, ஹைதராபாத், சண்டிகர் ஆகிய 12 நகரங்களில் இக்கல்வி நிறுவனத்திற்கான கல்வி வளாகங்கள் செயல்படுகின்றன.




இளநிலை பட்டப்படிப்புகள்: 


பி.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்‌ஷன் 


பி.டெஸ்., - லெதர் கூட்ஸ் அண்டு ஆக்சசெரிஸ் டிசைன்


பி.டெஸ்., - பேஷன் டிசைன்


படிப்பு காலம்: 4 ஆண்டுகள்



பி.பி.ஏ., - ரீடெய்ல் அண்டு பேஷன் மெர்சன்டைஸ் 


படிப்பு காலம்: 3 ஆண்டுகள்



முதுநிலை பட்டப்படிப்புகள்:


எம்.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்‌ஷன்


எம்.பி.ஏ., - ரீடெய்ல் அண்டு பேஷன் மெர்சன்டைஸ் 


படிப்பு காலம்: 2 ஆண்டுகள்



கல்வித்தகுதி: 


இளநிலை பட்டப்படிப்புகளுக்கு, 12ம் வகுப்பில் தேர்ச்சி வேண்டும். உரிய அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமா படிப்பை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.



எம்.டெஸ்., படிப்பில் சேர்க்கை பெற, புட்வேர், லெதர், டிசைன், பேஷன், இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்‌ஷர், டெக்னாலஜி, கவின்கலை போன்றவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., படிப்பிற்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



சேர்க்கை முறை: https://applyadmission.net/fddi2022 எனும் இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி வழி தேர்வாக மட்டுமே நடைபெறும் ஏ.ஐ.எஸ்.டி., தேர்வில் ஒரு மதிப்பெண் கொண்ட மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் இடங்கள் ஒதுக்கப்படும்.


 


விபரங்களுக்கு: www.fddiindia.com



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us