ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,ல் முதுநிலை படிப்புகள் | Kalvimalar - News

ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,ல் முதுநிலை படிப்புகள்மார்ச் 16,2022,11:42 IST

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் போபாலில் செயல்படும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச் கல்வி நிறுவனத்தில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.




முதுநிலை பட்டப்படிப்பு: எம்.எஸ்சி., - பயோலஜிக்கல் சயின்சஸ், கெமிஸ்ட்ரி மற்றும் மேத்மெடிக்ஸ்


 


தகுதி: உரிய இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகிய பிரிவினருக்கு மதிப்பெண்களில் 5 சதவீத தளர்வு உண்டு. கெமிஸ்ட்ரி மற்றும் மேத்மெடிக்ஸ் பாடப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் ’ஜாம்’ தேர்வை எழுதியிருக்க வேண்டும்.



ஆராய்ச்சி படிப்புகள்: இன்டெக்ரேட்டர்டு பிஎச்.டி., மற்றும் பிஎச்.டி.,



இன்டெக்ரேட்டர்டு பிஎச்.டி.,: 


பிரிவுகள்: கெமிஸ்ட்ரி, மேத்மெடிக்ஸ் மற்றும் பிசிக்ஸ்



தகுதி: உரிய இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகிய பிரிவினருக்கு மதிப்பெண்களில் 5 சதவீத தளர்வு உண்டு. ’ஜாம்’ தேர்வை எழுதியிருக்க வேண்டும். பிசிக்ஸ் பாடப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் 'ஜாம்’ அல்லது 'ஜெஸ்ட்’ தேர்வு எழுதியிருக்க வேண்டும்.



பிஎச்.டி.,:




பிரிவுகள்:


* பயோலஜிக்கல் சயின்சஸ்


* கெமிக்கல் இன்ஜினியரிங்


* கெமிஸ்ட்ரி


* டேட்டா சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்


* எர்த் அண்டு என்விரான்மெண்டல் சயின்சஸ்


* எக்னாமிக் சயின்சஸ்


* எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்


* ஹுமானிட்டிஸ் அண்டு சோசியல் சயின்சஸ்


* மேத்மெடிக்ஸ்


* பிசிக்ஸ்



தகுதிகள்


உரிய துறையில் முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகிய பிரிவினருக்கு மதிப்பெண்களில் 5 சதவீத தளர்வு உண்டு. பொதுவாக ஏதேனும் ஒரு தேசிய அளவிலான தகுதித் தேர்விலும் தகுதி பெற்றிருக்க வேண்டும். 



சில படிப்புகளுக்கான தகுதியில் இது மாறுபடலாம். 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எனினும், ஓ.பி.சி., பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. 



விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக ஆன்லையினில் விண்ணப்பிக்க வேண்டும். 



விபரங்களுக்கு: www.iiserb.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us