இன்னோவேஷன் விருது - 2022 | Kalvimalar - News

இன்னோவேஷன் விருது - 2022மார்ச் 28,2022,09:10 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் செயல்படும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - சி.எஸ்.ஐ.ஆர்., பள்ளி மாணவர்களிடையே புத்தாக்க முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவேஷன் விருது வழங்கப்படுகிறது.




அறிமுகம்: 


பள்ளி மாணவர்களிடையே, அறிவியல் மனோபாவத்தை ஊக்கப்படுத்துவதற்காகவும், புத்தாக்க உணர்வை உருவாக்கவும், அறிவார்ந்த சொத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த புத்தாக்க விருது திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக அறிவுசார் சொத்து தினத்தை முன்னிட்டு இந்த விருதுக்கான போட்டி தொடங்கப்பட்டது. 



விதிமுறைகள்:


* விருதுக்கான பரிந்துரைகள், புதுமையான மற்றும் பயனுள்ள ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு புதிய கருத்தாகவோ அல்லது யோசனையாகவோ அல்லது வடிவமைப்பாகவோ அல்லது ஏற்கனவே உள்ள பிரச்சனைக்கான தீர்வாகவோ அல்லது முற்றிலும் புதிய முறை / செயல்முறை / சாதனம் / பயன்பாடாக இருக்கலாம். 



* புத்தாக்க திட்டம், அதன் நன்மைகளையும் எடுத்துரைத்து, பிரச்சனை-தீர்வு முறையில் தகவல்கலை விவரிக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தியில் ஐந்தாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 



* பயோடெக்னாலஜி, உயிரியல், வேதியியல், மின்னணுவியல் மற்றும் பொறியியல் / சாதனம் மற்றும் வடிவமைப்பு போன்ற குழுக்களாக வகைப்படுத்தப்படும். 



* மாணவரது புத்தாக்க திட்டத்தின் தலைப்பு, பெயர், பிறந்த தேதி, முகவரி, பள்ளி மற்றும் வகுப்பு விபரம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரம் அடங்கியிருக்க வேண்டும். மேலும், மாணவரது பள்ளியின் முதல்வர் / தலைவரால் வழங்கப்பட்ட முத்திரை மற்றும் தேதியுடன் அங்கீகாரச் சான்றிதழ் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். 



* ஜனவரி 1, 2022 தேதியின்படி 12ம் வகுப்பு வரை மற்றும் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இந்திய பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் படிக்கும் எந்தவொரு மாணவரும், பள்ளியின் முதல்வர்/தலைவர் அனுமதியுடன் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவர் அல்லது மாணவர் குழுவாக புத்தாக்க திட்டத்தை சமர்ப்பிக்கலாம். மாணவர்கள் குழுவாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் குழுவிற்கு ஒரு விருது வழங்கப்படும்.



* உயர்மட்ட விருதுகள் தேர்வுக் குழுவால் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, செப்டம்பர் 26, 2022க்குள் அறிவிக்கப்படும்.



பரிசு விபரம்:


முதல் பரிசு ஒருவருக்கு ரூ.1,00,000, இரண்டாம் பரிசு இருவருக்கு தலா ரூ.50,000, மூன்றாம் பரிசு 3 பேருக்கு தலா ரூ.30,000, நான்காம் பரிசு 4 பேருக்கு தலா ரூ.20,000, ஐந்தாம் பரிசு 5 பேருக்கு தலா ரூ. 10,000.



விண்ணப்பிக்கும் முறை: பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அல்லது கூரியர் வாயிலாக விண்ணப்பங்களை நகல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி விருதுக்கான விண்ணப்பங்களை ciasc.ipu@niscair.res.in என்ற இ-மெயில் வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம்.



விபரங்களுக்கு: www.csir.res.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us