காபி சுவைக்கும் படிப்பு | Kalvimalar - News

காபி சுவைக்கும் படிப்புசெப்டம்பர் 07,2022,17:41 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ், பெங்களூருவில் செயல்படும் இந்திய காபி வாரியம், காபி தர மேலாண்மையில் முதுநிலை பட்டயப் படிப்பை வழங்குகிறது.



படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் காபி குவாலிட்டி மேனேஜ்மெண்ட் - பி.ஜி.டி.சி.க்யூ.எம்., 



முக்கியத்துவம்: இந்திய காபி தொழில்துறையில் நிலவும், முறையான பயிற்சி பெற்ற மற்றும் துறை சார்ந்த திறன் கொண்ட காபி சுவையாளர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. 



பாடப்பிரிவுகள் உள்ளடக்கம்:


காபி சாகுபடி நடைமுறைகள், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் நடைமுறைகள், காபி தர மதிப்பீடு, வறுத்தல் மற்றும் காய்ச்சும் நுட்பங்கள், சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகம், தரம் உத்தரவாத அமைப்புகள் (கோட்பாடு மற்றும் நடைமுறை அமர்வுகள்) ஆகியவை அடங்கும்.



கால அளவு: 


மூன்று பருவங்களுடன் 12 மாதங்கள் கொண்ட இப்படிப்பு ஆங்கில மொழியில் வழங்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் சிக்மகலூரில் உள்ள சி.சி.ஆர்.ஐ., மத்திய காபி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதல் பருவமும், பெங்களூருவில் மீதமுள்ள இரண்டு பருவங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது.



கல்வித்தகுதி: 


உயிரியல், விலங்கியல், வேதியியல், உயிரிதொழில்நுட்பம், உயிரி அறிவியல், உணவு தொழில்நுட்பம், உணவு அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை இளநிலை பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும் அல்லது வேளாண்மை அறிவியல் துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



கல்விக்கட்டணம்: 


2 லட்சத்து 50 ஆயிரம். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீத விலக்கு அளிக்கப்படும்.



தங்குமிடம்: 


சி.சி.ஆர்.ஐ.,யில் வழங்கப்படும் முதல் மூன்று மாதத்திற்கான படிப்பில் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. 



முன்னுரிமை: 


இப்படிப்பில் சேர தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றபோதிலும், காபி துறையை சார்ந்த நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.



தேர்வு செய்யப்படும் முறை: 


கல்வி திறன், நேர்காணல் மற்றும் உணர்ச்சி மதிப்பீட்டு சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் பிரத்யேக குழுவால் தேர்வு செய்யப்படுவர்.



விபரங்களுக்கு: www.indiacoffee.org 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us