அமல்ராஜ் (பிளஸ் 2 தேர்வு - இந்திய கலாச்சாரத்தில் இரண்டாமிடம்) 2013 | Kalvimalar - News

அமல்ராஜ் (பிளஸ் 2 தேர்வு - இந்திய கலாச்சாரத்தில் இரண்டாமிடம்) 2013

எழுத்தின் அளவு :

சின்னாளபட்டி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அந்தோணி, முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஜாக்குலின் ராணி. இவர்களது மகன் அமல்ராஜ், மகள் விக்டோரியா ராணி. இவர்கள், காந்திகிராமம் தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தனர்.

மாநில அளவில் இந்திய கலாச்சாரம் பாடத்தில் முதலிடம் பெற்ற விக்டோரியா ராணியின் அண்ணன் அமல்ராஜ், "இந்திய கலாச்சாரம்" பாடத்தில் 174 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். மொத்த மதிப்பெண்கள்-1065.

மாணவர் அமல்ராஜ் கூறுகையில், "2005ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலான பிளஸ் 2 பொதுதேர்வு கேள்வித் தாள்களை சேகரித்தேன். அவற்றில் மீண்டும், மீண்டும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முக்கியத்துவம் தந்து படித்தேன்.

இது பயனுள்ளதாக இருந்தது. "டிவி" பார்க்க மாட்டேன். தினமலர் நாளிதழில் வெளியிட்ட மாதிரி வினா-விடை பகுதியை தவறாமல் சேகரித்து படித்தேன். தினமலர் நடத்திய ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்றது தன்னம்பிக்கை அளித்தது" என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us