சி.யு.இ.டி., யு.ஜி., - 2023 | Kalvimalar - News

சி.யு.இ.டி., யு.ஜி., - 2023மார்ச் 15,2023,17:45 IST

எழுத்தின் அளவு :

மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 'காமன் யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட் - யு.ஜி.,’ தேர்வு வாயிலாக நடத்தப்படுகிறது.



முக்கியத்துவம்


இந்திய அரசின் சார்பில், மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை இத்தேர்வை தலைமை ஏற்று நடத்துகிறது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக சி.யு.இ.டி., -யு.ஜி., மற்றும் சி.யு.இ.டி., -பி.ஜி., தேர்வு நடத்தப்படுகிறது. 



பங்குபெறும் கல்வி நிறுவனங்கள்: 


மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பங்குபெறும் இதர நிகர்நிலை மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் இத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.



தேர்வு விபரம்:


இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெற உள்ள இத்தேர்வில் ’மல்டிபில் சாய்ஸ்’ வடிவில் கேள்விகள் இடம்பெறும். செக்‌ஷன் 1ஏ - 1பி, செக்‌ஷன் 2 மற்றும் செக்‌ஷன் 3 ஆகிய பகுதிகளில் முறையே மொழிப்பாடங்கள், குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகள் இடம் பெறுகின்றன.  



கேள்வி தாள்: ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். 



தேர்வு மையங்கள்: நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.



விண்ணப்பிக்கும் முறை: https://cuet.samarth.ac.in/index.php/site/login எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.



விபரங்களுக்கு: 


இணையதளங்கள்: www.nta.ac.in மற்றும் https://cuet.samarth.ac.in/


தொலைபேசி: 011-40759000, 69227700



இ-மெயில்: cuet-ug@nta.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us