வெப் டிசைனிங் படிப்பு பற்றி சில தகவல்கள் கூறவும். | Kalvimalar - News

வெப் டிசைனிங் படிப்பு பற்றி சில தகவல்கள் கூறவும்.ஜனவரி 12,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

கிராபிக்ஸ் மற்றும் லே அவுட்களை வடிவமைப்பது வெப் டிசைனர்கள் தான். ஆர்ட்டிஸ்டிக் என்று ஆங்கிலத்தில் கூறுவது போல கலைத் தன்மை கொண்டவர்களுக்கு இது சரியான துறை தான்.


விசுவல் ஆர்ட்ஸ் அல்லது விசுவல் டிசைன் இவற்றில் ஒன்றில் தகுதி பெற்றிருப்பதுடன் வண்ணங்கள் பற்றிய நுட்பமான திறனைப் பெற்றிருப்பவர் இத் துறையில் பரிமளிக்கின்றனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் தகுதியைப் பெற்றிருப்பவருக்கும் இது பொருத்தமான துறை தான். அரினா, ஆப்டெக் மற்றும் எடிட் போன்ற நிறுவனங்கள் இப் பிரிவில் சிறப்புப் படிப்புகளை நடத்துகின்றன.


இந்தியாவைப் பொறுத்த வரை வெப் டிசைனிங் துறைக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. பல நிறுவனங்களும் தங்களுக்கான வெப் சைட்டுகளை வடிவமைத்து வருகின்றன. இதற்கு எண்ணற்ற அளவில் வெப் டிசைனர்கள் தேவைப் படுகின்றனர். மேலும் விளம்பர நிறுவனங்கள், பதிப்பகங்கள்,ஆடியோ விசுவல் மீடியா, டிசைன் ஸ்டூடியோக்கள், பிரின்டிங் நிறுவனங்கள் மற்றும் டைப் செட்டர்கள் ஆகியவற்றிலும் பெரும் எண்ணிக்கையில் வெப் டிசைனர்கள் தேவைப்படுகின்றனர். அனுபவத்தையும் திறனையும் பொறுத்து வருமானமும் மதிப்பும் அமைகின்றன. சாப்ட்வேர் நிறுவனங்களிலும் வெப் டிசைனர்கள் தேவைப்படுகின்றனர்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us