பல்துறை அறிவே இன்றைய தேவை! | Kalvimalar - News

பல்துறை அறிவே இன்றைய தேவை!மே 20,2023,12:00 IST

எழுத்தின் அளவு :

ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், மிஷின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி என கம்ப்யூட்டர் சார்ந்த பல்வேறு துறைகளில் இன்று மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 



மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இத்தகைய படிப்புகள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டாலும், அத்தகைய துறை சார்ந்த அறிவு மட்டுமே இன்றைய காலக்கட்டத்திற்கு போதுமானது அல்ல. அக்ரிகல்ச்சர், பயோடெக்னாலஜி, மெக்கானிக்கல் என எந்த துறையை சேர்ந்த மாணவர்களும் கம்ப்யூட்டர் குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல், கம்ப்யூட்டர் துறை சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களும் அக்ரிக்கல்ச்சர், ஆட்டோமொபைல் என இதர துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.



மூளை சார்ந்த வேலை



ஏனெனில், வரும் காலங்களில் அனைத்தும் ஆட்டோமேஷன் ஆகப்போகிறது. எந்த துறையாக இருந்தாலும் அவற்றில் கடினமான உடல் உழைப்பிற்கான தேவை வரும் காலங்களில் இருக்காது. முற்றிலும் மூளை சார்ந்த வேலையாகவே இருக்கும். அத்தகைய மாற்றத்திற்கு ஒரு துறை சார்ந்த அறிவு மட்டும் போதாது. உதாரணமாக, ஒரு ஏக்கர் உளவு செய்வதற்கு 28 கி.மீ. நடக்க வேண்டிய நிலையை மாற்றியது டிராக்டர் என்ற கண்டுபிடிப்பு. ஒரு ஆட்டோமொபைல் துறை வல்லுனர் விவசாயத்தை பற்றி தெரிந்தால் மட்டுமே அத்துறையின் தேவைகளை புரிந்து அதற்குரிய கருவிகளை கண்டுபிடிக்க முடியும். 



ஆகவே தான், எங்கள் கல்வி நிறுவனத்தில் எந்த துறை சேர்ந்த மாணவரும், முதலாம் ஆண்டில் இருந்தே சி, பைத்தான், ஜாவா ஆகிய மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்றில் நன்கு கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கிறோம். அதேபோல், ஒவ்வொரு செமஸ்டரிலும், சைக்காலஜி, எக்னாமிக்ஸ், ஆந்த்ரோபாலஜி, மொழியியல், விவசாயம் என பல்வேறு பாடங்களை கற்பிக்கிறோம். இவ்வாறு பல்துறை அறிவையும் பெரும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது; தலைமைப் பண்பு மேலோங்குகிறது. எதிர்காலத்தில் ஒரு முழுமையான மனிதராக உலகில் வளம்வர முடியும்.



உயர்கல்வி, தொழில்முனைவோர், வேலைவாய்ப்பு என மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப உரிய பயிற்சிகளை அளிக்கிறோம். கொரோனா காலத்தில் துவக்கப்பட்ட ஆன்லைன் வாயிலான கற்பித்தல் முறையை தற்போதும், தினமும் வகுப்புகள் நிறைவடைந்தபின் மாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் இருந்தே கற்கவும் பயன்படுத்துகிறோம்.



கற்றல் அவசியம்



தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை மூன்றாம் ஆண்டிலேயே மாணவர்களிடம் வளர்க்கிறோம். இறுதியாண்டில் இன்டர்ன்ஷிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற ஊக்கம் அளிக்கிறோம். தமிழ், மலையாளம், தெலுங்கு என மாணவர்களின் அவரவர் தாய்மொழிக்கு ஏற்ப சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். கல்வி என்பது கல்லூரிகளில் மட்டுமே நிகழ்வதில்லை. வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்பவரே சிறந்த மனிதராக முடியும். கால மாற்றத்திற்குஏற்ப புதியவற்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். 



- எஸ். தங்கவேலு, தலைவர், ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கோவை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us