மீன்வளப் படிப்புகள் | Kalvimalar - News

மீன்வளப் படிப்புகள்ஜூன் 13,2023,12:29 IST

எழுத்தின் அளவு :

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 10 ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், மீன்வளம் சார்ந்து பல்வேறு இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. 



குறிக்கோள்கள்:


மீன்வள அறிவியலில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க முயற்சிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளுதல், சமூகப் பொறுப்புள்ள பட்டதாரிகள் உருவாக்குதல் மற்றும் மீன்வளத்தில் நிலையான வளர்ச்சி அடைதல் ஆகியவற்றை இப்பல்கலைக்கழகம் குறிக்கோள்களாகக் கொண்டுள்ளது.



வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகள்:


பி.எப்.எஸ்சி., - பிஷரீஸ் சயின்ஸ்


பி.டெக்., - பிஷரீஸ் இன்ஜினியரிங்


பி.டெக்., - எனர்ஜி அண்டு என்விரான்மெண்டல் இன்ஜினியரிங்


பி.டெக்., - பயோடெக்னலாஜி


பி.டெக்., - புட் இன்ஜினியரிங்


பி.பி.ஏ., - பிஷரீஸ்  எண்டர்பிரைசஸ் மேனேஜ்மெண்ட்


பி.வொக்., - இண்டஸ்ட்ரியல் பிஷ் புராசசிங் டெக்னாலஜி


பி.வொக்., - இண்டஸ்ட்ரியல் அக்குவாகல்ச்சர்


பி.வொக்., - இண்டஸ்ட்ரியல் பிஷ்ஷிங் டெக்னாலஜி


மற்றும் பல்வேறு முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன.



கல்வித்தகுதி: இளநிலை பட்டப்படிப்பில் சேர பொதுவாக, குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



கல்வி வளாகங்கள்:


1. பிஷரீஸ் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - தூத்துக்குடி


2. டாக்டர். எம்.ஜி.ஆர். பிஷரீஸ் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - திருவள்ளூர்


3. டாக்டர். எம்.ஜி.ஆர். பிஷரீஸ்  காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - நாகப்பட்டினம்


4. காலேஜ் ஆப் பிஷரீஸ் இன்ஜினியரிங் - நாகப்பட்டினம்


5. இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரீஸ் பயோடெக்னாலஜி - சென்னை


6. டி.என்.ஜே.எப்.யூ., பிஷரீஸ் பிசினஸ் ஸ்கூல் - சென்னை


7. காலேஜ் ஆப் பிஷ் நியூட்டிரிஷன் அண்டு புட் டெக்னாலஜி - சென்னை


8. பாராபுரொபஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரீஸ் டெக்னாலஜி - சென்னை


9. பாராபுரொபஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்குவாகல்ச்சர் டெக்னாலஜி - சென்னை


10. பிஷரீஸ் டிரைனிங் இன்ஸ்டிடியூட் - ராமநாதபுரம்



விண்ணப்பிக்கும் முறை: https://tnagfi.ucanapply.com/ எனும் இணையதளம் வாயிலாக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 



முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், தமிழக அரசு பள்ளிகளில் படித்தவர்கள், மீனவர் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் ஆகியோருக்கென சிறப்பு இட ஒதுக்கீடு உண்டு. வெளிநாடுவாழ் இந்தியர்களும் பி.எப்.எஸ்சி., மற்றும் பி.டெக்.,- பிஷரீஸ் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு சேர்க்கை பெறலாம்.



விபரங்களுக்கு: 


இ-மெயில்: ugadmission@tnjfu.ac.in


இணையதளம்: www.tnjfu.ac.in


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us