கேட்டரிங் படிப்பு | Kalvimalar - News

கேட்டரிங் படிப்புஜூலை 24,2023,17:44 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில், பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், ஹாஸ்பிட்டாலிட்டி எனும் விருந்தோம்பல் படிப்புகளுடன் கேட்டரிங் படிப்பை சேர்த்து சிறப்பு பாடமாக வழங்குகின்றன. சில கல்வி நிறுவனங்கள் கேட்டரிங் படிப்பை தனிப்படிப்பாகவும் வழங்குகின்றன.




முக்கியத்துவம்


விருந்தோம்பல் துறை முன்னணி தொழில்களில் ஒன்றாக இன்று உருவெடுத்துள்ளது. இத்துறையில், உணவு சேவை, ஹோட்டல் மேலாண்மை போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. 2021ம் ஆண்டில், விமானத்தில் கேட்டரிங் சேவைகளுக்கான உலகளாவிய சந்தை 8.50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை எட்டியுள்ளது. 



7.1 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை வரும் காலங்களிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானம் மட்டும் இன்றி, சொகுசு கப்பல்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் கேட்டரிங் படித்தவர்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.



இளநிலை படிப்புகள்: 


பி.எஸ்சி., - கேட்டரிங் சயின்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட்


பி.எஸ்சி., - ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி


பி.எஸ்சி., - கேட்டரிங் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் 


பி.எஸ்சி., - மரைன் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் 



முதுநிலை படிப்பு: 


எம்.எஸ்சி., - ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் சயின்ஸ்


எம்.எஸ்சி., - ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் டூரிசம் 


எம்.எஸ்சி., - ஹோட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் 


எம்.பி.ஏ., - ஹோட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட்



பாடத்திட்டம்: உணவு தயாரிப்பு, உணவு பரிமாறுதல், ஹவுஸ் கீப்பிங், ரூம் அலர்ட் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய கேட்டரிங் படிப்பு, 90 சதவீத செய்முறையும், 10 சதவீத தியரியும் கொண்டது. வேலை வாய்ப்பினை பெற்றுத்தரும் வகையில் சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.



தகுதிகள்: இளநிலை பட்டப்படிப்பில் சேர, 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, ஆங்கிலத்தை கட்டாய பாடமாக படித்திருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் சேர, ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹாஸ்பிட்டாலிட்டி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 



வேலை வாய்ப்புகள்


கேட்டரிங் முடித்தவர்களுக்கு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. மரைன் கேட்டரிங் படித்தவர்கள் நேரடியாக கப்பல்களில் பணிபுரிய முடியும். மேலும், ஸ்டார் ஓட்டல்கள், ஏர்லைன்ஸ், இந்திய சுகாதாரத்துறை, ஆர்மி கேட்டரிங், மருத்துவமனைகள் என பல்வேறு துறைகளில் இந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு உள்ளது. கார்ப்பரேட் கேட்டரிங், ஈவெண்ட் கேட்டரிங், மொபைல் கேட்டரிங், கபேக்கள், ஓய்வு விடுதி, ஹோட்டல்கள், உணவகங்கள், துரித உணவங்கள், கேட்டரிங் நிறுவனங்கள், கேட்டரிங் ஹவுஸ், ரிசார்ட்ஸ், கிளப் ஆகிய இடங்களில் வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன. சுயதொழில் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us