மருத்துவமனை நிர்வாக படிப்புகள் | Kalvimalar - News

மருத்துவமனை நிர்வாக படிப்புகள்நவம்பர் 27,2023,10:05 IST

எழுத்தின் அளவு :

மருத்துவமனைகள், கிளினிக்குகள், சுகாதார மையங்களில், நிர்வாக செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகளை கண்காணித்தல், விதிமுறைகளை உருவாக்குதல் மற்றும் பின்பற்றுதல், நோயளிகளுக்கு வழிகாட்டுதல் உட்பட சுகாதார வசதிகள் மற்றும் அதன் சார்ந்த பணிகள் சீராக இயங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், நிபுணர்களை உருவாக்கும் படிப்பு, ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரெஷன்.




பாடத்திட்டம்


பிரின்ஸிபல்ஸ் ஆப் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், அட்மினிஸ்ட்ரேட்டிவ் கம்யூனிகேஷன், ஆர்கனைசேஷன் பிஹேவியர், ஹெல்த்கேர் எக்னாமிக்ஸ், ஹெல்த் மேனேஜ்மெண்ட், பண்டமெண்டல்ஸ் ஆப் ஹெல்த் மேனேஜ்மெண்ட், ஸ்ட்ராடெஜெடிக் மேனேஜ்மெண்ட், பைனான்சியல் மேனேஜ்மெண்ட் ஆகியவை முக்கிய பாடங்களாக உள்ளன. இத்துறை படிப்புகளில் சேர 'நீட்’ தேர்வு தேவை இல்லை.



படிப்புகள்:




இளநிலை படிப்பு


பி.எச்.ஏ., - பேச்சுலர் ஆப் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன்- 3 ஆண்டுகள்: பிளஸ் 2 படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சி.இ.டி., போன்ற நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 



முதுநிலை படிப்புகள்


எம்.எச்.ஏ., - மாஸ்டர் ஆப் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன் - 2 ஆண்டுகள்: குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் பி.எச்.ஏ., அல்லது மருத்துவம் அல்லது அறிவியல் தொடர்பான துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனத்தை பொறுத்து, கேட், மேட், எக்ஸ்.ஏ.டி., சிமேட் போன்ற நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.



எம்.பி.ஏ., இன் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் - 2 ஆண்டுகள்: இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன், நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 



முதுநிலை டிப்ளமோ படிப்பு - ஹெல்த் மேனேஜ்மென்ட்: இப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு, மருத்துவம் தொடர்பான ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது ஒரு தொழில்முறை படிப்பு என்பதால் சுகாதார துறையில் ஒரு வருட முன் அனுபவமும் எதிர்பார்க்கப்படுகிறது.



ஆராய்ச்சி படிப்பு


பிஎச்.டி., இன் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன்: எம்.எச்.ஏ., போன்ற முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



வேலை வாய்ப்புகள்


மருத்துவமனை மேலாளர், ஹெல்த்கேர் கன்சல்டன்ட், ஹெல்த் சர்வீசஸ் மேனேஜர், மெடிக்கல் பிராக்டிஸ் பண்ட் மேனேஜர், ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் புரோகிராம் மேனேஜர், குவாலிட்டி இம்ப்ரூவ்மெண்ட் மேனேஜர், மார்க்கெட் அனலிஸ்ட், மெடிக்கல் கேர் மேனேஜர் போன்ற பணி வாய்ப்புகளை பெறலாம். 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us