12 மொழிகளில் தொழில்நுட்ப புத்தகங்கள்! | Kalvimalar - News

12 மொழிகளில் தொழில்நுட்ப புத்தகங்கள்!ஜனவரி 15,2024,12:00 IST

எழுத்தின் அளவு :

மாணவர்களிடையே படைப்பாற்றல் மற்றும் விமர்சன சிந்தனையை மேம்படுத்தும் வகையில், அவரவர் தாய்மொழியில் உயர்கல்வியை வழங்குவதை, இந்திய கல்வி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட 'தேசிய கல்விக் கொள்கை-2020’ ஊக்குவிக்குகிறது.



அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், முதலில் ஹிந்தி, தமிழ், குஜராத்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி, தெலுங்கு, பஞ்சாபி, ஒடியா ஆகிய 9 மொழிகளில் தொழில்நுட்ப புத்தகம் எழுதும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, அஸ்ஸாமி, மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் புத்தங்கள் வெளியிடப்படுகின்றன. 




12 மொழிகள்



முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பு சார்ந்து டிப்ளமோ அளவில் 11 மற்றும் பட்டப்படிப்பு அளவில் 9 என மொத்தம் 20 பாடப்பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆங்கில மொழிகளில் அசல் புத்தகத்தை எழுதுவதற்காகவும், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் மாநில மொழிகளில் எழுத மொழிபெயர்ப்பாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு மொழிக்கும், தரமான பாடப்புத்தகங்களை வழங்குவதற்காக பல்கலைக்கழகங்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 



இரண்டாம் ஆண்டில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின் பொறியியல், இயந்திரப் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் மற்றும் குடிமைப் பொறியியல் ஆகிய ஐந்து முக்கிய துறைகளில் 42 பட்டப்படிப்பு பாடங்கள் மற்றும் 46 டிப்ளமோ பாடங்கள் என மொத்தம் 88 பாடப்பிரிவுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய பாடப்பிரிவுகள் ஆங்கிலத்தில் எழுதுதோடு, 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன.



ஏ.ஐ.சி.டி.இ., புத்தகங்களின் அம்சங்கள்:



* புத்தகத்தின் உள்ளடக்கம் பாடநெறி மற்றும் அலகின் அடிப்படையில் முறையாக சீரமைக்கப்பட்டுள்ளது.


* ஒவ்வொரு யூனிட்டின் தொடக்கத்திலும், அந்த அலகை முடித்த பிறகு, மாணவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் கற்றல் முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


* புத்தகம் சமீபத்திய தகவல்கள், சுவாரஸ்யமான உண்மைகள், மின்-வளங்களுக்கான கியு.ஆர்., குறியீடு ஆகியவற்றை வழங்குகிறது. 


* சமச்சீர் மற்றும் காலவரிசைப்படி, புத்தகத்தில் மாணவர் மற்றும் ஆசிரியர்களை மையமாகக் கொண்ட பாடப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.


* தலைப்புகளின் தெளிவை மேம்படுத்த புள்ளிவிவரங்கள், அட்டவணைகள் மற்றும் மென்பொருள் ஸ்கிரீன் ஷாட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.



இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களிலும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு இந்திய மொழிகளில், விளைவு அடிப்படையிலான தொழில்நுட்பக் கல்வி புத்தகங்களை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏ.ஐ.சி.டி.இ.,யின் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ.,யின் இணையதளத்தில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.



விபரங்களுக்கு: https://ekumbh.aicte-india.org/allbook.php



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us