துருக்கி உதவித்தொகை -2024 | Kalvimalar - News

துருக்கி உதவித்தொகை -2024பிப்ரவரி 14,2024,10:30 IST

எழுத்தின் அளவு :

துருக்கிய கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில விரும்பும் கல்வியில் சிறந்த இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு உதவித்தொகை வழங்குகிறது.



படிப்பு நிலைகள்: இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள்



உதவித்தொகை விபரம்: 


* இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முழுவதும் துருக்கி அரசே ஏற்றுக்கொள்கிறது. 


* ஓர் ஆண்டில் எந்த கட்டணமும் இன்றி துருக்கிஷ் மொழி கற்றுக்கொள்ளவும் முடியும். 


* படிப்பு காலத்தில் மாணவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படுகிறது. 


* துருக்கி சென்று, திரும்புவதற்கான விமானக் கட்டணமும் இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.


* இவைதவிர, மருத்துவ காப்பீடு மற்றும் படிப்பு நிலைக்கு ஏற்ப மாத ரொக்க உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.



தகுதிகள்:


* இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் குறைந்தது 70 சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.


* முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


* மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பார்மசி படிப்புகளுக்கு குறைந்தது 90 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.


* பிஎச்.டி., படிப்புகளுக்கு 35 வயதிற்கு உட்டப்பட்டவராக இருக்க வேண்டும். இதர ஆராய்ச்சி படிப்புகளுக்கு 50 வயதிற்கு உட்டப்பட்டவராக இருக்கலாம்.



விண்ணப்பிக்கும் முறை: https://tbbs.turkiyeburslari.gov.tr/  எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தேவையான கல்வி சான்றிதழ்கள், அரசு அடையாள அட்டை, புகைப்படம், இதர நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றுகள், ஆங்கில மொழிப்புலமைக்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை: ஆரம்பகட்ட மதிப்பீடு, நிபுணர் குழுவால்  மதிப்பீடு செய்தல், தேர்வு, நேர்முகத் தேர்வு, இறுதி மதிப்பீடு ஆகிய நிலைகளில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.




விபரங்களுக்கு: www.turkiyeburslari.gov.tr/whyturkiyescholarships



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us