தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வேலை வாய்ப்புக்கு உதவும் படிப்புகளை நடத்துகிறதா? | Kalvimalar - News

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வேலை வாய்ப்புக்கு உதவும் படிப்புகளை நடத்துகிறதா? ஜூலை 26,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியா மட்டுமல்லாது உலகெங்குமுள்ள மாணவர்களின் மத்தியில் பிரபலமாகவுள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் போல கடந்த சில ஆண்டுகளாக தமிழ் பேசும் நல்லுலகம் முழுவதும் அறிந்துள்ள பெயர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் என்பதை அறிவோம். திறந்தவெளி முறையில் சிறப்பான தரத்தில் மிக நவீனமான படிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்திவரும் இப்பல்கலைக்கழகம் நடத்தும் வேலை வாய்ப்புக்கு உதவும் சிறப்புப் படிப்புகள் பற்றி ஒரு சிறிய பார்வை இதோ உங்களுக்காக...

வொகேஷனல் படிப்புகள் எனப்படும் இந்த வேலை வாய்ப்புப் படிப்புகள் பட்டியலிடப்படுகின்றன.

* டிப்ளமோ இன் டி.டி.பி. ஆபரேட்டர்
* டிப்ளமோ இன் ரெப்ரிஜரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங் டெக்னீசியன்
* டிப்ளமோ இன் ஹவுஸ் எலக்ட்ரீஷியன்
* டிப்ளமோ இன் பிளம்பிங் டெக்னீசியன்
* டிப்ளமோ இன் கேட்டரிங் அசிஸ்டன்ட்
* டிப்ளமோ இன் போர் வீலர் மெக்கானிசம்
* டிப்ளமோ இன் பேஷன் டிசைன் மற்றும் கார்மென்ட் மேக்கிங்
* டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டன்ட்
* டிப்ளமோ இன் பிரீ-பிரைமரி கிண்டர்கார்டன் டீச்சர் டிரைனிங்
* டிப்ளமோ இன் பியூட்டிசியன்

அனைத்து படிப்புகளுக்கும் தகுதி 10ம் வகுப்பில் தேர்ச்சி.

தமிழ்நாட்டில் 31 இடங்களில் அதற்குமேற்பட்ட எண்ணிக்கையில் இதன் தொடர்பு மையங்கள் உள்ளன. இவற்றில் படிப்பு துவங்கும் காலம், கட்டணம், தகுதி போன்ற அனைத்து விபரங்களையும் பெறலாம்.

குறைவான செலவில் நல்ல படிப்புகளை நமது தாய்மொழியிலேயே அல்லது ஆங்கிலத்தில் படிக்கும் அரிய பணியைச் செய்து வரும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தை நாடி நாம் பலன் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us