நண்பர் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி, கோயம்புத்துõர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார். சேரலாமா? | Kalvimalar - News

நண்பர் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி, கோயம்புத்துõர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார். சேரலாமா?ஜூன் 30,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

சென்னை தவிர தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் சிலவற்றில் அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கும் மையங்களில் சிறப்பான படிப்புகள் நடத்தப்படுவது மாணவர்கள் பலருக்குத் தெரியாது. உங்களது நண்பர் மிக அருமையான அறிவுரையைத் தான் கூறியிருக்கிறார்.

 

நீங்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருநெல்வேலியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படும் படிப்புகளுக்குக் கட்டாயம் விண்ணப்பிக்கலாம். இது நடத்தும் படிப்புகளில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான் நீங்கள் சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள் என்றாலும் ஒரு வாய்ப்பு இருப்பதை அறியவும். இந்த மையத்தில் பின்வரும் படிப்புகள் நடத்தப்படவுள்ளன.

 

M.Sc. Computer Science

M.Sc. Information Technology

M.Sc. Software Engineering

 

இந்தப் படிப்புகளுக்கான கல்வித் தகுதி பிளஸ் 2வில் ஒரே தடவையில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துடன் பாஸ் செய்திருக்க வேண்டும்.

 

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.600. எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு ரூ.300. ஜூன் 16 முதல் விண்ணப்பங்கள் தரப்படுகின்றன. நிரப்பிய விண்ணப்பங்களை ஜூன் 30க்குள் பல்கலைக்கழகத்தில் தர வேண்டும். முழு விபரங்களை அண்ணா பல்கலைக் கழகத்தின் தளத்தில் பார்த்துக் கொள்ளவும். இவற்றை தொலைபேசியிலும் பெறலாம்.

 

தொலைபேசி எண்: 0462 - 2554255 மற்றும் 2552877.

 

பல்கலைக்கழக மைய முகவரி:

 

The Vice Chancellor,

Anna University Tirunelveli,

Government College of Engineering Campus,

Tirunelveli 627 007

Advertisement
« முதல் பக்கம்
எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us