பிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை | Kalvimalar - News

பிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உள்ள சிறுபான்மை மாணவிகள் பொருளாதார வசதியின்மையால் தங்களது படிப்பை தொடரமுடியாமல் பாதியிலேயே கைவிடும் நிலைக்கு ஆளாகின்றனர். இதனையடுத்து இவர்கள் தொடர்ந்து படிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் மவுலான ஆசாத் நேஷனல் ஸ்காலர்ஷிப் திட்டம். இது மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் கீழ் 1989ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுபான்மை மாணவிகள்:
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா ஆசாத் பெயரில் துவக்கப்பட்ட இந்த திட்டத்தின் படி, நாட்டில் உள்ள முஸ்லிம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம் போன்ற சிறுபான்மை சமூகத்தில் உள்ள மாணவிகள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.

கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, தற்போது பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் மட்டும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறு எதாவது ஒரு கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.

உதவித்தொகை:
இத்திட்டத்தின் படி விண்ணப்பிக்கும் தகுதியுள்ள மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இத்தொகை பிளஸ் 1 படிக்கும் போது 6 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 2 படிக்கும் போது 6 ஆயிரம் ரூபாயும் என இருதவணையாக வழங்கப்படும்.  இத்தொகை மாணவிகளின் பள்ளிக் கட்டணம், புத்தகம், எழுதுபொருள், விடுதிக்கட்டணம் போன்றவற்றுக்காக வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை www.maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணம் எதுவுமில்லை. மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளி முதல்வரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை கீழ் உள்ள முகவரிக்கு 2010, ஆக., 31ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

முகவரி:
MAULANA AZAD EDUCATION FOUNDATION,
(Ministry of Minority Affairs,
Govt. of India)
Social Justice Service Centre,
Chelmsford Road,
New Delhi –110055.

மேலும் விபரங்களுக்கு 011 – 23583788, 23583789 என்ற தொலைபேசி எண்களையும், www.maef.nic.in என்ற இணையதளத்தையும் பார்க்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us