இஸ்ரேலிய அரசு உதவித்தொகை | Kalvimalar - News

இஸ்ரேலிய அரசு உதவித்தொகைஜனவரி 04,2022,00:00 IST

எழுத்தின் அளவு :

2022-23 கல்வி ஆண்டில் இஸ்ரேலில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.



இஸ்ரேலில் உள்ள எந்த கல்வி நிறுவனத்திற்கும், மாணவர் விரும்பும் படிப்பிற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.



தகுதிகள்: 


* சிறந்த கல்வி செயல்திறனுடன் குறைந்தது பி.ஏ., அல்லது பி.எஸ்சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். 


* கல்வி ஆண்டின் தொடக்கத்தில், 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 


* இஸ்ரேலியா தூதரகத்தால் வழங்கப்படும் ஏ2 மாணவர் விசாவை பெற வேண்டும். 


* ஆங்கிலம் அல்லது ஹீப்ரு மொழியில் புலமைக்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.


* இஸ்ரேலிய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.



குறிப்பு: இஸ்ரேலிய பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே, மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்



உதவித்தொகை விபரம்:


இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்தால் மூன்று வகையான உதவித்தொகை வழங்கப்படுகிறது.



முதலாவதாக, பகுதி கல்விக் கட்டணமாக அதிகபட்சம் 6 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை வழங்கப்படும். அவற்றுடன், ஒரு கல்வி ஆண்டுக்கான மாதாந்திர செலவினங்களுக்கு 8 மாதங்கள் மட்டும் அதாவது, அக்டோபர் முதல் ஜூன் வரை உதவித்தொகை வழங்கப்படும். இவை தவிர, அடிப்படை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.



இரண்டாவதாக, கல்விக் கட்டணம் இன்றி, 8 மாதங்களுக்கு மாதாந்திர செலவினங்களுக்கான உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். 



இறுதி திட்டமாக, கோடைகால மொழி கற்றலுக்கான ’உல்பன் உதவித்தொகை’ வழங்கப்படுகிறது. இதில், முழு கல்விக் கட்டணம், தங்கும் விடுதி செலவு, 3 வார உதவித்தொகை மற்றும் மருத்துவ காப்பீடு ஆகியவை இடம் பெறுகின்றன. 



விண்ணப்பிக்கும் முறை: 


மாணவர்கள் www.education.gov.in இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.



விபரங்களுக்கு: www.education.gov.in மற்றும் https://mfa.gov.il/




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us