புல்பிரைட் உதவித்தொகைகள் -2023 | Kalvimalar - News

புல்பிரைட் உதவித்தொகைகள் -2023பிப்ரவரி 07,2022,00:00 IST

எழுத்தின் அளவு :

குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களுக்கு, கடந்த 1950ம் ஆண்டு முதல் புல்பிரைட் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. தற்போது, 2023-24ம் ஆண்டிற்கான பல்வேறு புல்பிரைட் உதவித்தொகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 



முக்கியத்துவம்


மாணவர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் மேம்பட்ட ஆய்வு அல்லது பயிற்சி மேற்கொள்ள வழங்கப்படும் இந்த உதவித்தொகை திட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இந்த திட்டத்தின் வாயிலாக, இதுவரை சுமார் 21,000 இந்திய மற்றும் அமெரிக்க குடிமக்களுக்கு இந்த உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. 



விவசாயம், கலை, வணிகம், கல்வி, சுற்றுச்சூழல், சமூகசேவை, சமூக அறிவியல், பொது சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமையை வெளிக்கொணர்ந்த சாதனையாளர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.



புல்பிரைட்-நேரு உதவித்தொகை


* புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் உதவித்தொகை


* புல்பிரைட்-நேரு டாக்டோரல் ரிசர்ச் உதவித்தொகை


* புல்பிரைட்-நேரு அகடமிக் அண்டு புரொபஷனல் எக்ஸ்செலன்ஸ் உதவித்தொகை


* புல்பிரைட்-நேரு விசிட்டிங் சேர் திட்டம் - இமொரி பல்கலைக்கழகம்


* புல்பிரைட்-நேரு விசிட்டிங் சேர் திட்டம் - மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகம்


* புல்பிரைட்-நேரு போஸ்ட் டாக்டோரல் ரிசர்ச் உதவித்தொகை 



புல்பிரைட்-கலாம் கிளைமேட் உதவித்தொகை


ஆற்றல் ஆய்வுகள், பூமி, அறிவியல், புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்மார்ட் சிட்டிகள், விவசாயம், பொதுக் கொள்கை, சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும்


பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் திறமைமிக்கவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.


இத்திட்டத்தின் கீழ், 


* புல்பிரை-கலாம் கிளைமேட் பெல்லோஷிப்ஸ் பார் டாக்டோரல் ரிசர்ச்


* புல்பிரை-கலாம் கிளைமேட் பெல்லோஷிப்ஸ் பார் போஸ்ட் டாக்டோரல் ரிசர்ச்


* புல்பிரை-கலாம் கிளைமேட் பெல்லோஷிப்ஸ் பார் அகடமிக் அண்டு புரொபஷனல் எக்ஸ்செலன்ஸ் ஆகிய மூன்று உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.



இவை தவர,


* ஹூபர்ட் எச். ஹம்ப்ரி பெல்லோஷிப் திட்டம்


* புல்பிரைட் பாரின் லேங்குவேஜ் டீச்சிங் அசிஸ்டெண்ட் திட்டம்


* புல்பிரைட் சர்வதேச ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திட்டத்தில் சிறப்புமிக்க விருதுகள்


* புல்பிரைட் சிறந்த கற்பித்தல் மற்றும் சாதனைத் திட்டம்


* புல்பிரைட் ஸ்காலர்-இன்-ரெசிடென்ஸ் திட்டம் போன்ற உதவித்தொகை திட்டங்களிலும் துறை சார்ந்த திறனாளர்கள் விண்ணப்பிக்கலாம்.




உதவித்தொகைகள் மற்றும் சலுகைகள்:


*  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜே- 1 விசா 


*  அமெரிக்க சென்று வருவதற்கான விமான பயணச்சீட்டு 


*  கல்விக் கட்டணம் மற்றும் தங்கும் செலவு 


* மருத்துவக் காப்பீடு 


உட்பட திட்டத்தை பொறுத்து ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.



விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்பு https://www.usief.org.in/ எனும் அமெரிக்க-இந்திய கல்வி அறக்கட்டளையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாக படித்து தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை: 


உரிய கல்வித்தகுதி, கல்வி மற்றும் தொழில்முறை செயல்பாடுகள், தொடர்பியல் திறன், தேசிய சேவை உணர்வு, அமெரிக்காவில் கல்வி, பயிற்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் ஆர்வம், தலைமைப் பண்பு, நோக்கம் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



யு.எஸ்.ஐ.இ.எப்., மையங்கள்: 


இத்திட்டத்தை நிர்வகிக்கும் யு.எஸ்.ஐ.இ.எப்., இந்தியாவில், புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்படுகிறது. எனினும், தற்போதைய பெருந்தொற்று காலத்தால் இம்மையங்களின் நேரடி சேவைகள் பாதிக்கப்படலாம்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: மேற்கண்ட அனைத்து உதவித்தொகை திட்டத்திற்கும் தற்போது விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை திட்டத்தைப் பொறுத்து விண்ணப்பத்திற்கான இறுதி தேதி மாறுபடுகிறது. 



விபரங்களுக்கு: www.usief.org.in



தொலைபேசி: 1800 103 1231



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us