மெக்கால் மேக்பெயின் உதவித்தொகை | Kalvimalar - News

மெக்கால் மேக்பெயின் உதவித்தொகைஜூலை 11,2023,00:00 IST

எழுத்தின் அளவு :

கனடாவின் மெக்கால் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள், இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.



நோக்கம்: 


தலைமைப்பண்புடன், பிறரது வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 



துறைகள்: 


வேளாண்மை, சுற்றுச்சூழல் அறிவியல், கலை, பல்மருத்துவம், கல்வி, பொறியியல், சட்டம், மேலாண்மை, மருத்துவம் மற்றும் ஹெல்த் சயின்சஸ், இசை, அறிவியல்.



உதவித்தொகை விபரம்:


மெக்கால் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் 150க்கும் மேற்பட்ட முதுநிலை அல்லது தொழில்முறை படிப்புகளில் கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் ஆகிய செலவீனங்களுக்காக மாதம் 2 ஆயிரம் டாலர்கள் வழங்கப்படுகிறது. தலைமை பண்பை மேம்படுத்தும் வகையில் அனுபவமிக்க ஆலோசகர்கள் மற்றும் வழிகாட்டுனர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவைதவிர, சமுதாய குழுக்களை உருவாக்கவும் ஊக்கம் அளிக்கப்படுகிறது.



உதவித்தொகை எண்ணிக்கை: 


இந்த உதவித்தொகை திட்டத்தில், மொத்தம் 10 சர்வதேச மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதுடன், 25 பேருக்கு 20 ஆயிரம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. 



தகுதிகள்:


கடந்த 5 ஆண்டுகளுக்குள் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவராக இருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன்பு இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தாலும், 30 வயதிற்குட்பட்டவர்கள் இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், தற்போது இளநிலை பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். போதிய ஆங்கில திறனும் எதிர்பார்க்கப்படுகிறது. 



தேர்வு முறை: 


விண்ணப்பித்தவர்களில் 85 பேர் இறுதிக்கட்ட நேர்முகத்தேர்வுக்கு அழைக்கபப்டுவர். சிறந்த பண்பு, சமூக ஈடுபாடு, தலைமைப் பண்பு, தொழில் முனைவோர் மனப்பான்மை, கல்வி செயல்திறன் மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 



விபரங்களுக்கு: https://mccallmacbainscholars.org/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us