பிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன? | Kalvimalar - News

பிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன? ஏப்ரல் 22,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக இன்று பிளாஸ்டிக் பயன்பாடை அறியாதவர் யாருமில்லை. அதன் குறைவான விலை, பயன்பாட்டு வகைகள், நீடித்திருக்கும் தன்மை ஆகியவற்றால் பிளாஸ்டிக்குக் கான கிராக்கி அதிகமாகவே இருக்கிறது. சொல்லப்போனால் ஸ்டீலுக்குப் பின் அதிக தேவை இருப்பது பிளாடிக் குக்குத் தான். ரப்பர், கண்ணாடி, பேப்பர் ஆகியவற்றுக்கு மாற்றாக பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகிய படிப்புகள் தரப்படுகின்றன.

பிளாஸ்டிக் டெக்னாலஜியை அறிய விரும்பும் மாணவர்கள் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., படிப்பில் சேரலாம். அல்லது எம்.எஸ்சி., வேதியியல் முடித்த பின் எம்.டெக்., பிளாஸ்டிக் டெக்னாலஜியில் சேரலாம்.

  • இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி
  • கொச்சின் பல்கலைக்கழகம்
  • மும்பை பல்கலைக்கழகம்
  • மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே
  • அகமதாபாத் எல்.டி. காலேஜ் ஆப் இன்ஜினியரிங்
  • ஆமதாபாத் நிர்மா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

போன்றவற்றில் பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகள் தரப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த படிப்பானது நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள சிப்பெட் நிறுவனம் இப் பிரிவில்
பி.ஜி. டிப்ளமோ, டிப்ளமோ மற்றும் எம்.டெக்., படிப்புகளைத் தருகிறது.
முழு விபரங்களறிய உதவும்

முகவரி:

Deputy Director

CIPET

TVK Industrial Estate

Guidny, Chennai 600032.

www.cipetindia.com


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us