குழந்தைகளை கையாளும் முறை | Kalvimalar - News

குழந்தைகளை கையாளும் முறை

எழுத்தின் அளவு :

எங்கள் ஊரில் ஒவ்வொரு வருடமும் குழந்தை வளர்ப்பு பற்றிய கருத்தரங்கு பயிற்சி நடைபெறும். அதில் எல்லா நாட்டு மக்களும் அவர்கள் குழந்தையுடன் பெற்றோர்களும் பங்கேற்பது வழக்கம். குழந்தை பராபரிப்பு பற்றியும், குழந்தை வளர்ப்பு பற்றியும், தெரிந்து கொள்வதற்கென்றே ஏராளமான பெற்றோர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்கின்றனர்.

பெரும்பாலான பெற்றோர்கள் இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமலே இருகிறார்கள்:
1. குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?
2. பெற்றோர்கள் சொல்வதை எவ்வாறு பிள்ளைகளை கேட்க வைப்பது? 
3. எவ்வாறு தன் குழந்தையை ஒருமுகப்படுத்துவது?.. என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பயிற்சி பிரத்யேகமாக நடத்தப்படுகிறது.

முதலில் உங்கள் குழந்தையை, ஒரு பொருளாக நினைத்து கண்மூடித்தனமாக கையாள்வது தவறான விஷயமாகும். உங்கள் குழந்தை மனோபாவம் இயற்கையானது, ரசிக்க கூடியது, ஆர்வ மூட்டுவது, வழி நடத்த ஏதுவானது, குழந்தையின் மன நிலையை அறிந்து செயல்படுவதே பெற்றோரின் கடமையாகும்.

சில பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பதையே பாரமாக நினைப்பார்கள், குழந்தைகள் செய்யும் சிறு சிறு குறும்புகள் கூட சில சமயத்தில் எரிச்சல் அடைவார்கள்.  குழந்தை பருவம் என்பது கவனமாக பாதுகாக்க வேண்டிய நேரமாகும். எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் சில குழந்தைகள் அதற்கு மாறாக தான் நடந்துக் கொள்ளும். குழந்தைகளை அவர்கள் வழியிலேயே சென்று பக்குவமாக எடுத்து கூறி தன் வழிக்கு கொண்டு வர வேண்டும்.

உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் கூறுவதை அப்படியே செய்ய முயற்சி செய்யும். ஆசிரியர் கொடுக்கும் பயிற்சியில் பல புது புது விஷயங்களை அறிந்துக் கொள்வதற்கும், சக குழந்தைகளுடன் பழகுவதை தெரிந்துக் கொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமையும். குழந்தைகளிடம் ஆசிரியர் கூறியதை கேட்கலாம், அதை பற்றி விரிவாக விளக்கலாம், சுவாரசியமான நிகழ்சிகளை பரிமாறும் போது ஒருமுகப்படுத்தி கேட்கும் திறன் அதிகரிக்கும்.

குழந்தைகளை உங்கள் வழிக்கு கொண்டு வாருங்கள், நிறைய புது புது விஷயங்களை சொல்வது மட்டுமின்றி அதை நேரடியாக பார்க்கும் படி செய்யுங்கள், பிறகு உங்கள் குழந்தையை விட சிறந்தவர்களை நீங்கள் பார்க்கவே முடியாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us