சுய மதிப்பீட்டை பாதிக்கும் தன்னிரக்கம் | Kalvimalar - News

சுய மதிப்பீட்டை பாதிக்கும் தன்னிரக்கம்

எழுத்தின் அளவு :

பெரும்பாலும் சில மக்கள் தன்னை எப்பொழுதும் தாழ்த்தியே மதிப்பிடுவர். எந்த நிலையிலும் தன்னை குறைத்து மதிப்பிடுவதால் முன்னேற்றங்கள் நம் கையை விட்டு வெகு தூரம் விலகி செல்கின்றது. சிலர் தம்மை இந்த வகையிலெல்லாம் தாழ்த்திக் கொள்வர்.

* சிறு வயதிலேயே என் பெற்றோரை இழந்து தவிக்கின்றேன்.
* நான் செய்யும் வேலை மிகவும் கடினமானது, என்னை போல் யாரும் செய்ய முடியாது.
* என் சம்பாத்தியம் எனக்கு போதவே இல்லை.
* எனக்கு உண்மையான நண்பர்களே கிடையாது.
* நான் வேலை செய்யும் இடத்தில் என்னை மோசமாக நடத்துகின்றனர்.
* என் உடலில் நிறைய வியாதி.
* என்னால முடிஞ்சதெல்லாம் செஞ்சிட்டேன், ஆனாலும் குண்டாகவே இருக்கேன். இதை போன்று நிறைய சொல்லி கொண்டே போகலாம். இவர்களுக்கெல்லாம் நிறைவு என்பதே இருக்காது.

சிலர் தன்னை எப்போதுமே என்னால எதுவும் செய்ய முடியலையே, என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வர். எந்த ஒரு விஷயத்தையும் அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருக்காது. மற்றவர்கள் தன் மீது பரிவும் பச்சா தாபமும் காட்ட வேண்டும் என்று நினைத்து சில சமயத்தில் பொய்யும் உரைப்பர். இவர்களுக்கு சுயமாக எதுவும் முடிவெடுக்க தெரியாது. எதிமறையான எண்ணங்கள் எப்போதும் முன்னேற்றமடைவது தடுத்துக் கொண்டே தான் இருக்கும்.

பிள்ளைகளிடையே தாழ்வு மான்பான்மை ஏற்படுவதற்கு பெரும்பாலும் பெற்றோர்களே காரணமாகி விடுகின்றனர். எதிமறையான எண்ணங்கள் பிள்ளைகளிடையே தோன்றும் போது பெற்றோர்கள் அதை வழிமொழிகின்றனர். பெற்றோர்கள் சில விஷயத்திற்காக தன் பிள்ளைகள் மீது பரிவு காட்டுவார்கள்.

* இந்த சின்ன வயதிலேயே படிப்பதற்கு இவ்வளவு பாடமா...
* பாடங்கள் அனைத்தும் மிக கடினம்.
* விளையாடுவதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை.
* குழந்தை பாவம் காலைல ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து படிக்கிறான்.
* அவனுக்கு அப்பாவே இல்லை
* அம்மாவே இல்லை

இவ்வாறு இன்னும் சொல்லி கொண்டே போகலாம். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் ஊக்கம் அளிக்க வேண்டும். பெற்றோகளின் அறியாமையினால் பிள்ளைகளை எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் ஒருவித பயத்துடனே செய்து முடிப்பர். சிலர் என்னால் முடியாது என்று கைவிட்டு விடுவார்கள்.
 
எதிர்மறையான எண்ணங்கள் மனதில் வேரூன்றி விதைக்கபடுவதால் பிள்ளைகளின் திறமைகள் மறைக்கபடுகின்றன. எந்த ஒரு செயலையும் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியாது. பிள்ளைகளை எந்த நேரத்தில் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பெற்றோர்களான நீங்கள் தான்  தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகளின் தைரியத்தை வெளி கொணர வேண்டும். பிள்ளைகளின் தன்னிரக்க குணத்தை மதிப்பீடு செய்யுங்கள் வளர்ச்சிக்கு உரு துணையாய் இருங்கள் வாழ்கையில் வெற்றி பாதையை நோக்கி பயனிக்கலாமே.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us