எம்.எஸ்சி., மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படித்து வரும் எனக்கு வேலை கிடைக்குமா? | Kalvimalar - News

எம்.எஸ்சி., மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படித்து வரும் எனக்கு வேலை கிடைக்குமா? ஜனவரி 03,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

குறிப்பிட்ட படிப்பு முடிப்பவர்களுக்கு குறிப்பிட்ட வேலை என்ற காலம் மலையேறி விட்டதை அறிவீர்களா? எம்.எஸ்சி., மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை நீங்கள் படித்து அறிந்திருக்கும் விதத்திலும் உங்களது பிரிவில் நீங்கள் பெற்றிருக்கும் திறன்களின் அடிப்படையிலும் தான் உங்களுக்கான வேலை கிடைக்கும்.

பொதுவாக பத்திரிகை, ‘டிவி’, ரேடியோ என எந்த வெகுஜன ஊடகத்தில் பணி புரிந்தாலும், அங்கே பணித் தன்மையானது சவாலானதாகவும் திறம்பட பணி புரியும் தேவையைக் கொண்டிருப்பதாகவுமே அமையும் என்பதை அறியுங்கள். கால நேர வரையறையின்றி கடுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டியவை தான் இந்தப் பணிகள்.

முதலில் இதற்கு நீங்கள் தயாராக இருப்பது முக்கியம். எனினும் முதலில் நீங்கள் நுழைவது சிறிய நிறுவனமாக இருந்தாலும் பரவாயில்லை என்று உடனே சேருவதே அறிவுத்தப்படுகிறது. அனுபவத்தைக் கொண்டே அடுத்தடுத்த நல்ல பணிகளுக்கு நீங்கள் செல்ல முடியும். எனவே முதலில் சீக்கிரமாக நல்ல பணி ஒன்றில் சேர முயற்சிக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us