இன்ஜினியரிங்கோ விசுவல் கம்யூனிகேஷனோ எல்லாப் படிப்புகளும் சில காலத்திற்கு உச்சத்திலும் சில காலத்திற்கு மந்த நிலையிலும் வாய்ப்புகளைத் தருகின்றன. பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்து இவற்றில் சில ஏற்றத்தாழ்வுகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. ஆனால் எந்தப் படிப்பை நாம் படிக்க வேண்டும் என்பது நமது அடிப்படை ஆர்வத்தையும், திறனையும் பொறுத்தது தான்.
எனவே விசுவல் கம்யூனிகேஷன் படிப்பு பற்றி கவலை வேண்டாம். இல்லஸ்டிரேட்டர், எடிட்டோரியல் டிசைனர், கார்ப்பரேட் ஐடென்டிடி டிசைனர், பேக்கேஜிங் டிசைனர், அனிமேஷன் ஆர்ட்டிஸ்ட், மல்டிமீடியா டிசைனர், வீடியோ போஸ்ட் புரடக்ஷன் ஆர்ட்டிஸ்ட், வெப் டிசைனர், டெவலப்பர், 3டி கிராபிக்ஸ் டிசைனர், அனிமேட்டர், கிரியேடிவ் டைரக்டர் என விசுவல் கம்யூனிகேஷன் அள்ளித் தரும் வாய்ப்புகள் ஏராளம்.
மீடியா நிறுவனங்கள், ‘டிவி’ நிறுவனங்கள், பப்ளிஷிங் நிறுவனங்கள், மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் என எத்தனையோ நிறுவனங்களில் உங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அடிப்படையில் உங்களது படிப்பில் ஆழமான திறனையும், பொதுவாக அடிப்படை தகவல் தொடர்புத் திறனையும் சிறப்பாக நீங்கள் பெற்றிருந்தால் உங்களது வேலை உறுதியாகும்.