பிளஸ் 2 பொதுத்தேர்வு; மே 6ல் ரிசல்ட் | Kalvimalar - News

பிளஸ் 2 பொதுத்தேர்வு; மே 6ல் ரிசல்ட்மார்ச் 21,2024,09:34 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 22ல் நிறைவு பெறுகின்றன. மே 6ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, இந்த மாதம், 1ம் தேதி துவங்கியது.


முதலில் மொழி பாடங்களுக்கும், பின் முக்கிய பாடங்களுக்கும் தேர்வுகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு தமிழ் தேர்வு எளிதாகவும், ஆங்கிலம், இயற்பியல் தேர்வுகளின் வினாத்தாள்கள் கடினமாகவும் இருந்தன. பிளஸ் 2 மாணவர்களுக்கான இறுதி தேர்வு மார்ச் 22ல் நடக்கிறது.


உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழிற்கல்வி இன்ஜினியரிங்பாடங்கள், அலுவலகமேலாண்மை உள்ளிட்டவற்றுக்கு, மார்ச் 22ல் தேர்வு நடக்கிறது. இத்துடன், பிளஸ் 2 பொது தேர்வு நிறைவு பெறுகிறது.


பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி வரும், 1ம் தேதி துவங்க உள்ளது. ஏப்., 13க்குள் மதிப்பீட்டு பணிகளை முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளது. மே 6ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us