ஓட்டளிப்பதின் அவசியம்: விழிப்புணர்வு ஊர்வலம் | Kalvimalar - News

ஓட்டளிப்பதின் அவசியம்: விழிப்புணர்வு ஊர்வலம்மார்ச் 22,2024,09:54 IST

எழுத்தின் அளவு :

சிவகங்கை: சிவகங்கையில் ஓட்டளிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் இந்திய வரைபட வடிவில் நின்று கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு அளித்தனர்.


சிவகங்கை லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 16,23,408 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஓட்டளிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.


மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கலெக்டர் பி.ஏ.,க்கள் (பொது) முத்துக்கழுவன், (தேர்தல்) ஜான்சன் சகாயம், கோட்டாட்சியர் விஜயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், தேர்தல் தாசில்தார் மேசியாதாஸ், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார், மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி முதல்வர் துரையரசன், பேராசிரியர்கள் கலைச்செல்வி, கேத்தராஜ் பங்கேற்றனர்.


சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரி மாணவிகள் ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, விழிப்புணர்வு அளித்தனர்.


ஊர்வலம் பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. பின்னர் கலெக்டர் அலுவலக திடலில் மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி மாணவிகள் இந்திய வரைபட வடிவில் நின்று, ஓட்டளிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அளித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us