என் பெயர் பாரதி. நான் ஒரு கலைத்துறை மாணவன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. அதேசமயத்தில், இந்த நாட்டில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன, மாறாக, கலைத்துறை மாணவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இந்த நிலை இந்தியாவில் மட்டும்தானா, அல்லது உலகம் முழுவதுமா? எனவே, கலைத்துறை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகள்(ஆசிரியர் பணி தவிர்த்து) குறித்து, முக்கியமாக வரலாறு மற்றும் இலக்கியத் துறையில், விரிவாக பதிலளிக்கவும். | Kalvimalar - News

என் பெயர் பாரதி. நான் ஒரு கலைத்துறை மாணவன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. அதேசமயத்தில், இந்த நாட்டில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன, மாறாக, கலைத்துறை மாணவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இந்த நிலை இந்தியாவில் மட்டும்தானா, அல்லது உலகம் முழுவதுமா? எனவே, கலைத்துறை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகள்(ஆசிரியர் பணி தவிர்த்து) குறித்து, முக்கியமாக வரலாறு மற்றும் இலக்கியத் துறையில், விரிவாக பதிலளிக்கவும்.பிப்ரவரி 16,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

முதலில் உங்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு சமமாக, கலை மற்றும் வர்த்தகத் துறையிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். அதேசமயம், நீங்கள் என்னமாதிரியான தொழிலில் ஈடுபட உள்ளீர்கள் என்பதை முடிவு செய்வதும் அவசியம். பல கல்வி நிறுவனங்கள் இதுதொடர்பான முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றன.

கலைத்துறை மாணவர்கள், சட்டம், ஹோட்டல் மேலாண்மை, டிசைன், மொழிகள், ஆசிரியப் பணி, விசுவல் கம்யூனிகேஷன், வணிகம், பொருளாதாரம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட ஏராளமான துறைகளில் தங்களது தொழிலைத் தொடங்கலாம்.

வரலாற்று மாணவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுகள், குழு தேர்வுகள், பயணம் மற்றும் சுற்றுலா, சமூக சேவை(Social work), தொல்பொருளியல், ஆந்த்ரோபாலஜி போன்ற பலவித அம்சங்களில் வாய்ப்புகளைப் பெறலாம்.

மேற்கூறிய துறைகளில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்பதை தேர்வுசெய்து, அப்படிப்பை மேற்கொள்வதற்கான சிறந்த கல்வி நிறுவனத்தையும் தேர்வுசெய்ய வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us