வெப் டிசைனராக விரும்புகிறேன். இந்தத் துறை பற்றிக் கூறவும். | Kalvimalar - News

வெப் டிசைனராக விரும்புகிறேன். இந்தத் துறை பற்றிக் கூறவும்.மே 03,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

உலகில் இன்று வெப் டிசைனிங் திறன்களுக்காக மிகவும் விரும்பப்படுவது இந்தியர் தான் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக விளங்குகிறது.

ஐ.டி., தொடர்பான துறைகளில் ஒன்று வெப் டிசைனிங். இதோடு தொடர்புடைய புரொகிராமிங் லாங்வேஜ், ஸ்கிரிப்ட், டூல் மற்றும் பேக்கேஜ்களில் ஒன்றை நமது சிறப்புத் துறையாக தேர்வு செய்து கொள்ளலாம். இத்துறையில் உள்ள பிரிவுகள் எவை தெரியுமா?

வெப் டிசைனர், பிளாஷ் டிசைனர் மற்றும் கேம் ஸ்பெசலிஸ்ட், வெப் மாஸ்டர் மற்றும் போர்ட்டல் மாஸ்டர் ஆகியவை இத்துறையின் பிரிவுகளாக விளங்குகின்றன. ஒரு வெப்சைட்டின் டிசைனிங்கை உருவாக்குபவர் வெப் டிசைனர் தான். லோகோ, பேனர்கள், விளம்பரங்கள் மற்றும் இன்டர்ஆக்டிவை பயன்பாடுகளை எங்கு இடம் பெறச் செய்யவேண்டும் என்பதை இவர் வடிவமைக்கிறார். குறிப்பிட்ட வெப் பக்கத்தை பயன்படுத்துபவருக்கு உதவும் வகையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. எனவே வெப் டிசைனராக விரும்புபவர் குறைந்த பட்சம் எச்.டி.எம்.எல்.,லில் சிறப்புத் திறன் பெற்றிருப்பது அவசியம்.

குறிப்பிட்ட வெப் பக்கத்தில் இடம் பெறும் இமேஜ்களின் தரம், இடம் பெறும் கட்டுரை/வரிகளின் தரம், சர்ச் என்ஜின், டெக்ஸ்ட் மற்றும் படங்களின் வண்ணத் தரம், வேகமாக டவுண்லோட் செய்யும் வசதி போன்றவற்றை இவர் உறுதி செய்வது அவசியம்.

பட்டப்படிப்போடு சிறப்பான தகவல் தொடர்புத் திறன், டிசைனிங் அடிப்படைகளில் திறன், சர்ச் இன்ஜின் திறன், வெப் டிசைனிங்கில் நவீன தொழில்நுட்பத்தோடு பரிச்சயம், எச்.டி.எம்.எல்., டி.எச்.டி. எம்.எல்., சி.எஸ்.எஸ்., ஜாவா ஸ்கிரிப்ட், டிரீம்வீவர், பிளாஷ், பிளாஷ் ஆக்சன் ஸ்கிரிப்ட்ஸ் ஆகியவற்றில் நல்ல திறன் பெற்றிருப்பது, மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஓபேரா, மோஸில்லா பயர்பாக்ஸ் ஆகியவற்றில் அறிமுகம் பெற்றிருப்பதும் முக்கியம்.

பிளாஷ்டிசைனர் மற்றும் கேம் ஸ்பெஷலிஸ்ட் ஆகிய பணிகளில் ஈடுபடுபவர்கள் வெப்சைட்டில் பார்வையாளர்களைக் கவரும் அம்சங்களாக விளங்குகின்றன. 2டி மற்றும் 3டி டிசைன்களை மேக்ரோமீடியா பிளாஷ் மற்றும் ஸ்கிரிப்டிங் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்குகிறார்கள்.

பி.எச்.பி., கோல்ட் பியூசன், பெர்ல், ஜாவாஸ்கிரிப்ட் ஆகியவற்றை பயன்படுத்தி வெப் மாஸ்டர்கள் செயல்படுகின்றனர். ஒரு வெப்சைட்டை பயன்பாளர்கள் எந்த அளவுக்கு உபயோகப்படுத்தலாம் என்பதில் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். வெப் போர்ட்டல்களில் தரப்படும் பயன்பாடான இமெயில், நியூஸ், ஸ்போர்ட்ஸ், இகாமர்ஸ், டிராவல் மற்றும் சுற்றுலா, கவுன்சலிங் போன்ற எண்ணற்ற போர்ட்டல் பயன்பாடுகளை நிர்வகிப்பது போர்ட்டல் மாஸ்டர்கள் உருவாக்கி நிர்வகிக்கின்றனர்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us