என்.ஐ.டி.,யில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

என்.ஐ.டி.,யில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் வழங்கும் பல்வேறு படிப்புகளில், 2024-25ம் கல்வி ஆண்டில் சேர்க்கை பெற தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.




கல்வி நிறுவன வளாகங்கள்: அகமதாபாத், காந்திநகர், ஆந்திரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம், பெங்களூரு மற்றும் அசாம்.



வழங்கப்படும் படிப்புகள்:



இளநிலை பட்டப்படிப்பு: பி.டெஸ்., - பேச்சுலர் ஆப் டிசைன் - 4 ஆண்டுகள்



பிரிவுகள்:


கம்யூனிகேஷன் டிசைன் - பிலிம் அண்டு வீடியோ கம்யூனிகேஷன், எக்சிபிஷன் டிசைன், அனிமேஷன் டிசைன், கிராபிக் டிசைன்.


இண்டஸ்டிரியல் டிசைன் - செராமிக் அண்டு கிளாஸ் டிசைன், பர்னிச்சர் அண்டு இண்டீரியர் டிசைன், புராடெக்ட் டிசைன்.


டெஸ்டைல், அப்பேரல், லைப்ஸ்டைல் அண்டு ஆக்சஷரி டிசைன் - டெக்ஸ்டைல் டிசைன்



தகுதிகள்:


2003, ஜூலை 1ம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி., மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் கீழ் 2023-24ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பை நிறைவு செய்பவராக இருக்க வேண்டும். அறிவியல், கலை, வணிகவியல், சமூகவியல் என அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.



முதுநிலை பட்டப்படிப்பு: எம்.டெஸ்., - மாஸ்டர் ஆப் டிசைன்



படிப்பு காலம்: 2.5 ஆண்டுகள்



பிரிவுகள்:


கம்யூனிகேஷன் டிசைன் - பிலிம் அண்டு வீடியோ கம்யூனிகேஷன், அனிமேஷன் டிசைன், கிராபிக் டிசைன், போட்டோகிராபி டிசைன்.


இண்டஸ்டிரியல் டிசைன் - செராமிக் அண்டு கிளாஸ் டிசைன், பர்னிச்சர் அண்டு இண்டீரியர் டிசைன், புராடெக்ட் டிசைன், டாய் அண்டு கேம் டிசைன், டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்டு ஆட்டோமொபைல் டிசைன், யுனிவர்சல் டிசைன்.


ஐ.டி., இண்டெக்ரேட்டர்டு - டிஜிட்டல் கேம், இன்டரேக்‌ஷன் டிசைன், இன்பர்மேஷன் டிசைன், நியூ மீடியா டிசைன்.


இன்டர்டிசிப்பிலினரி டிசைன் - டிசைன் அண்டு ரீடெயில் எக்ஸ்பிரியன்ஸ், ஸ்டேடெஜிக் டிசைன் மேனேஜ்மெண்ட்.


டெஸ்டைல், அப்பேரல், லைப்ஸ்டைல் அண்டு ஆக்சஷரி டிசைன் - டெக்ஸ்டைல் டிசைன், அப்பேரல் டிசைன், லைப்ஸ்டைல் ஆக்சஷரி டிசைன்.



தகுதிகள்:


1992, ஜூலை 1ம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி., மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனத்தில் 3 அல்லது 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 4 ஆண்டு டிப்ளமா படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தற்போது இளநிலை படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.



தேர்வு முறை: டி.ஏ.டி., - டிசைன் ஆப்டிடியூட் டெஸ்ட் பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் ஆகிய தேர்வுகளின் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை: https://admissions.nid.edu/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 1



நுழைவுத் தேர்வு நாள்: டிசம்பர் 24



விபரங்களுக்கு: www.nid.edu



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us