யு.சி.இ.இ.டி., தேர்வு | Kalvimalar - News

யு.சி.இ.இ.டி., தேர்வு

எழுத்தின் அளவு :

தேசிய அளவிலான, சிறந்த மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை டிசைன் படிப்பில், சேர்க்கை பெறுவதற்கு எழுத வேண்டிய பொது நுழைவுத்தேர்வு யு.சி.இ.இ.டி.,



படிப்பு: பேச்சுலர் ஆப் டிசைன் - பி.டெஸ்.,



கல்வி நிறுவனங்கள்: ஐ.ஐ.டி.,-மும்பை, ஐ.ஐ.டி.,-டெல்லி, ஐ.ஐ.டி.,-கவுஹாத்தி, ஐ.ஐ.டி., - ஹைதராபாத் மற்றும் ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., இவை தவிர ஏராளமான கல்வி நிறுவனங்கள் யு.சி.இ.இ.டி., மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.



கல்வித் தகுதி: 


2023ம் ஆண்டில் 12ம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்கள் அல்லது 2024ல் நடைபெறும் 12ம் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல், வணிகவியல், கலை ஆகிய பிரிவு மாணவர்கள் பொது நுழைவுத்தேர்வை எழுதலாம்.



வயது வரம்பு: அக்டோபர் 1, 1999 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்கள் அக்டோபர் 1, 1994 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருக்கலாம்.  



தேர்வு முறை: மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் 2 பிரிவுகள் இடம் பெறும். ஆங்கிலத்தில் மட்டும் கேள்விகள் கேட்கப்படும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட வேண்டும்.



தேர்வு நேரம்: மூன்று மணிநேரம்



குறிப்பு: ஒரு மாணவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இத்தேர்வை எழுத முடியும். வெளிநாட்டுவாழ் இந்தியர், வெளிநாட்டினரும் இத்தேர்வை எழுதலாம். 



விண்ணப்பிக்கும் முறை: www.uceed.iitb.ac.in/2024/registration.html எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31



தேர்வு நாள்: ஜனவரி 21, 2024



விபரங்களுக்கு: www.uceed.iitb.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us