இலவச கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயிற்சி | Kalvimalar - News

இலவச கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயிற்சி

எழுத்தின் அளவு :

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் நிறுவப்பட்ட, எம்.எஸ்.எம்.இ.,யின் கீழ் சி.ஐ.டி.டி., எனும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் டூல் டிசைன் மையம் செயல்படுகிறது.



ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சென்னை கிண்டியில் உள்ள எம்.எஸ்.எம்.இ., வளாகத்தில் சி.ஐ.டி.டி., விரிவாக்க மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் கம்ப்யூட்டர் புரொகிராமிங் முழுநேர பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.



பயிற்சி: புரொகிராமிங் லேங்குவேஜ் பைத்தான்



பயிற்சி காலம்: 6 வாரங்கள்



தகுதி: ஏதேனும் ஒரு டிப்ளமா அல்லது இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். குறைந்தது 18 வயது நிரம்பியிருத்தல் அவசியம். 



தேவையான ஆவணங்கள்: 10ம், 12ம் மற்றும் டிப்ளமா/ டிகிரி சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம்.



பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 20



விபரங்களுக்கு: 9791161148, 9444923726



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us