ஐ.ஐ.எம்.,ல் எம்.பி.ஏ., அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.எம்.,ல் எம்.பி.ஏ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மும்பையில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.



படிப்புகள்: 


எம்.பி.ஏ., 


எம்.பி.ஏ., - ஆப்ரேஷன்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட்


எம்.பி.ஏ., - சஸ்டயினிபிலிட்டி மேனேஜ்மெண்ட்


பிஎச்.டி., 



தகுதிகள்: எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கை பெற அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., - ஆப்ரேஷன்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட் படிப்பிற்கு எம்.எஸ்சி., கணிதம் / புள்ளியியல் அல்லது பி.எஸ்., / பி.டெக்., -பொருளாதாரம் அல்லது கணிதம் / கம்ப்யூட்டிங் பிரிவில் இரட்டை பட்டப்படிப்பு. 



விண்ணப்பிக்கும் முறை: https://iimmumbai.ac.in/admission-2024 இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 



தேர்வு செய்யப்படும் முறை: கேட் எனும் காமன் அட்மிஷன் டெஸ்ட் அடிப்படையில் நேர்காணல் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இத்தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31



விபரங்களுக்கு: www.iimmumbai.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us