சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ., | Kalvimalar - News

சென்னை ஐ.ஐ.டி.,யில் எம்.பி.ஏ.,

எழுத்தின் அளவு :

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் எம்.பி.ஏ.,  படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.



கால அளவு: 2 ஆண்டுகள்



தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் அல்லது மாற்றுத்திறனாளிகள் 55 மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.



விண்ணப்பிக்கும் முறை: https://doms.iitm.ac.in/admission/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 



தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு, அட்மிஷன் வழங்கப்படும். 




விண்ணப்பக் கட்டணம்:


பொதுப் பிரிவினர்: ரூ. 1600


எஸ்.சி., / எஸ்.டி., : ரூ. 800



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31



விபரங்களுக்கு: https://doms.iitm.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us