உதய்பூர் ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி., | Kalvimalar - News

உதய்பூர் ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி.,

எழுத்தின் அளவு :

உதய்பூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 



கால அளவு: 5 ஆண்டுகள் வரை



தகுதி: மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது எம்.பில்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்புடன் சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ.,  சி.எஸ்., போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேபோல், 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் 75 சதவீத மதிப்பெண் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி உண்டு. 



விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் நகல், புகைப்படம், முகவரி சான்று, 10ம் வகுப்பு சான்றிதழ், 12ம் வகுப்பு சான்றிதழ், மற்றும் உரிய கல்வி சான்று நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 




சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கேட், ஜிமேட், ஜி.ஆர்.இ., நெட்- ஜே.ஆர்.எப்., போன்ற நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்காணலின் மூலம் சேர்க்கை பெறுவார்கள். 



உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை. மேலும், மாதம் 30 ஆயிரம் ரூபாய் முதல் உதவித்தொகை உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.



விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 9




விபரங்களுக்கு: www.iimu.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us