என்.பி.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

என்.பி.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் கீழ், செயல்படும் தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.



வளாகங்கள்: நெய்வேலி, நாக்பூர், படிதாபாத் - புதுடில்லி, சிவ்புரி - மத்தியபிரதேசம், பெங்களூரு



படிப்புகள்:


போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸ் - பவர் பிளான் இன்ஜினியரிங் 


போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸ் - ரீனிவெபல் எனர்ஜி அண்டு கிரிட் இன்டர்பேஸ் டெக்னாலஜிஸ்


எம்.பி.ஏ., - பவர் மேனேஜ்மெண்ட்



தகுதிகள்:


பி.ஜி.டி.சி., படிப்புகளில் சேர்க்கை பெற மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், சி அண்டு ஐ, பவர் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.டெக்., / பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கை பெற, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் கேட், மேட், சிமேட், சேட், ஜிமேட் ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேவையான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 



குறிப்பு: எம்.பி.ஏ., படிப்பு புதுடில்லியில் உள்ள பரிதாபாத் வளாகத்தில் வழங்கப்படுகிறது.



விண்ணப்பிக்க கடைசி நாள்: 


பி.ஜி.டி.சி., படிப்புகள் - பிப்ரவரி 22


எம்.பி.ஏ., - ஏப்ரல் 10



விபரங்களுக்கு: https://npti.gov.in 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us