என்.ஐ.டி.,யில் எம்.பி.ஏ., | Kalvimalar - News

என்.ஐ.டி.,யில் எம்.பி.ஏ.,

எழுத்தின் அளவு :

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.



தகுதிகள்: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.டி., எஸ்.சி., மாற்றுத்திறனாளி பிரிவினர் 55 மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். 



மேலும், ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் 2023ல் நடத்தப்பட்ட கேட் எனும் காமன் அட்மிஷன் டெஸ்டில் தேவையான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.



இடஒதுக்கீடு: இந்திய அரசின் விதிமுறையின் படி, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது.



விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31



விபரங்களுக்கு: https://nitc.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us