அண்ணா பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

அண்ணா பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.




படிப்புகள்: 


* எம்.பி.ஏ., - ஜெனரல் மேனேஜ்மெண்ட், டெக்னாலஜி மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், ஹுமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், பினான்சியல் சர்வீசஸ் மேனேஜ்மெண்ட், ஹெல்த் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், ஆப்ரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட்.


* எம்.எஸ்.சி.,- கம்ப்யூட்டர் சயின்ஸ்


* எம்.சி.ஏ.,



தகுதிகள்: எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கை பெற ஏதேனும் ஒரு 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புடன், அண்ணா பல்கலைக்கழகத்தின் டான்செட் 2023 தேர்வு எழுதியிருக்க வேண்டும்.



எம்.சி.ஏ., படிப்பில் சேர்க்கை பெற பி.சி.ஏ., அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், டான்செட் 2023 தேர்வு எழுதியிருக்க வேண்டும்.



எம்.எஸ்சி., படிப்பில் சேர்க்கை பெற, 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணிதம் அல்லது புள்ளியில் பாடத்தை இளநிலை பட்டப்படிப்பு அல்லது பள்ளி மேல்நிலை வகுப்புகளில் படித்திருக்க வேண்டும். இப்படிப்பிற்கு எந்த வித நுழைவுத்தேர்வும் எழுதியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.



கல்வி மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நாகர்கோவில், விழுப்புரம்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 5



விபரங்களுக்கு: https://cde.annauniv.edu/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us