மீன்வள அறிவியல் படிப்பவருக்கு வாய்ப்புகள் எப்படி? இதைப் பற்றிக் கூறுங்கள். | Kalvimalar - News

மீன்வள அறிவியல் படிப்பவருக்கு வாய்ப்புகள் எப்படி? இதைப் பற்றிக் கூறுங்கள்.ஜூலை 07,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

மீன் மற்றும் நீர்வாழ் உயிரினங்களைப் பற்றிப் படிப்பது மீன்வள அறிவியல். மீன் பிடிப்பு, பதனிடுவது, விற்பது மற்றும் மீன்வளப் பாதுகாப்பு போன்ற பணிகள் இதில் உள்ளன. மீன்களைப் பற்றிய புரிதலும் மேலாண்மையும் இத்துறையுடன் தொடர்புடையவை. இத்துறையில் உயிரியலோடு மீன் பற்றி பல்வேறு பிரிவுகளும் கற்றுத் தரப்படுகிறது.

மீன் வளர்ப்பு, தூய தண்ணீரில் நீரின நுண்ணுயிரி, உப்பு நீர் போன்ற பிரிவுகள் இதில் உள்ளன. மீன் வள அறிவியலின் முக்கிய நோக்கமே கடல்சார் வளங்களை நிர்வகிப்பதும் வளர்ப்பதும் தான். கடல் சார்ந்த மரைன் துறையில் ஈடுபாடும் கடல் தொடர்புடைய நோய்கள் தாக்காத உடல் நிலையும் ஒருவர் பெற்றிருந்தால் தான் இது பொருத்தமான துறையாக அமையும். ஆய்வு மனப்பாங்கையும் திறனையும் பெற்றிருந்தால் இது உங்களுக்கு மிகவும் பொருந்தும்.

மீன் வள பட்டப்படிப்பை பி.எப்.எஸ்சி., என்று கூறுகின்றனர். அக்வாகல்சர், இன்டஸ்ட்ரியல் பிஷரிஸ், மாரிகல்ச்சர், மீன் பதப்படுத்துதல், மீன்வளர்ப்பு தொழில்நுட்பம், பாதாலஜி, பிஷ் நியூட்ரிஷன், சுற்றுச் சூழலியல் போன்றவை இதில் பாடப்பகுதிகளாக உள்ளன. மீன்பிடி உபகரணங்கள், மீன் பிடித்தல் தொடர்பான நுணுக்கங்கள் இப் படிப்பில் உள்ளன.

மீன் வளத் துறைப் படிப்பைப் படித்தவருக்கு அரசுத் துறையிலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. மத்திய அரசின் விவசாயத் துறைகள், அரசுசார் நிறுவனங்கள், கடல் ஆய்வு மையம் இவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன. உலக சுகாதார நிறுவனம், இந்திய மீன்வள மையம் போன்றவற்றிலும் இத்துறையில் உயர்படிப்பு முடிப்பவர்களுக்கு வேலைகள் உள்ளன.

மேலும் ஹேச்சரிஸ், அக்வாகல்ச்சர் பார்ம், பதனிடும தொழிற்சாலைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. சுய வேலை வாய்ப்பையும் நீங்கள் மேற்கொள்ளலாம். தனியார் மீன் பண்ணை, ஏற்றுமதித் தொழில், அலங்கார உணவுகள் போன்ற பிரிவுகளிலும் நீங்கள் ஈடுபடலாம். எம்.எப்.எஸ்சி., முடித்தவர் ஆசிரியராகப் பணியாற்றலாம். ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் சயின்டிஸ்ட் பணிகளில் சேரலாம். இதற்கான தேர்வை ஏ.எஸ்.ஆர்.பி., என்னும் விவசாய அறிஞர்கள் தேர்வாணையம் நடத்துகிறது. தூத்துக்குடியிலுள்ள மீன்வள கல்லூரி மற்றும் ஆய்வு மையம் நடத்துகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us