சி.பி.எஸ்.இ வாரியத்தின் நிர்வாக கட்டமைப்பை அறிவோமா?!!! | Kalvimalar - News

சி.பி.எஸ்.இ வாரியத்தின் நிர்வாக கட்டமைப்பை அறிவோமா?!!!

எழுத்தின் அளவு :

சி.பி.எஸ்.இ வாரியம், மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதற்கென்று ஒரு உயர்மட்ட நிர்வாகக் கமிட்டி இருக்கிறது. மேலும், பல சட்ட ரீதியிலான குழுக்களும் இருக்கின்றன. இவைகள், அந்த வாரியத்திற்கு ஆலோசனைகளை வழங்குகின்றன. உயர்மட்ட நிர்வாகக் கமிட்டிக்கென்று பல விதிமுறைகள் உள்ளன. பல சட்டக் குழுக்கள் வழங்கும் பரிந்துரைகள் அனைத்தும், இறுதி முடிவுகளுக்காக, உயர்மட்ட நிர்வாகக் கமிட்டியின் முன் வைக்கப்படும்.

வாரியத்தின் கட்டமைப்பு

வாரியத்தின் தலைமைப் பதவியில் ஒரு தலைவர் இருப்பார். அவருக்கு துணைபுரிய, செயலர், இயக்குநர்(அகடமிக்), தேர்வுக் கட்டுப்பாட்டாளர், துறைத் தலைவர்(Edusat, R & D and vocational Education) மற்றும் துறைத்தலைவர்(Spl. Exams., Projects & Training) ஆகியோர் இருப்பர்.

உச்ச அதிகாரம் 

மத்திய கல்வித்துறை செயலாளரே, இந்த வாரியத்தைக் கட்டுப்படுத்தும் உச்ச அதிகாரமுடையவர். இவரே, தலைவர் மற்றும் துறைத் தலைவர்களை நியமிக்கிறார்.

செயலாளர்

CBSE செயலரே, முதன்மை நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறார். இவரே, நிர்வாகம், ஆடிட் மற்றும் அக்கவுண்ட், பொதுமக்கள் தொடர்பு, சட்டம் மற்றும் பள்ளிகளுக்கு இணைப்பு வழங்கல் போன்ற பணிகளுக்கு பொறுப்பாகிறார்.

இயக்குநர்

அகடமிக் பிரிவின் தலைவராக இயக்குநர் செயல்படுகிறார். உயர்நிலை மற்றும் மேல்நிலை அளவிலான பள்ளிப் படிப்பில், தொழிற்கல்வி மற்றும் அகடமிக் துறையின் அனைத்துப் பாடங்களின் பாடத்திட்டங்களையும் மேம்படுத்தல், ஆசிரியர் பயிற்சி பட்டறைகளை நடத்துதல், ஆசிரியர் மற்றும் மாணவர் வழிகாட்டலுக்கான உதவி உபகரணங்களை மேம்படுத்தல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவுகளுக்கான பாடப் புத்தகங்களை தயார் செய்தல் மற்றும் அகடமிக் திட்டங்களை மேற்பார்வையிடுதல் போன்றவை இதன் பணிகள்.

தேர்வுக் கட்டுப்பாட்டாளர்

தேர்வுக் கட்டுப்பாட்டாளர் என்பவர், தேர்வு தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பானவர். தேர்வுக்கு முந்தைய மற்றும் பிந்தையப் பணிகள், வருடாந்திர உயர்நிலை மற்றும் மேல்நிலை சான்றிதழ் தேர்வுகள் மற்றும் மருத்துவ மற்றும் பல்மருத்துவ நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கு, பிராந்திய அலுவலகங்களுடன் இணைந்து செயல்படுதல் போன்றவை இவரது முக்கியப் பணிகள்.

Edusat, R & D and vocational Education துறைத் தலைவர்

இஸ்ரோவால் நிறுவப்பட்ட கல்வி செயற்கைக்கோளின் மூலமாக நடத்தப்படும் தொலைநிலைக் கல்வி தொடர்பான அனைத்து விஷயங்கள் மற்றும் தொழிற்கல்விக்கான பாடத் திட்டங்களை வடிவமைத்தல் ஆகியவற்றுக்கு Edusat, R & D and vocational Education துறைத்தலைவர் பொறுப்பாகிறார்.

Spl. Exams., Projects & Training துறைத் தலைவர்

அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் ஜவஹர் நவோதயா செலக்ஷன் தேர்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் Spl. Exams., Projects & Training துறைத் தலைவர் கையாள்கிறார்.

கமிட்டிகள்

* நிதி
* தேர்வுகள்
* பாடத்திட்டங்கள்
* இணைப்பு(அங்கீகாரம்)
* மருத்துவ நுழைவுத்தேர்வு(PMT)

போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான கமிட்டிகள் இருக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us