நர்சிங் | Kalvimalar - News

நர்சிங்

எழுத்தின் அளவு :

நர்சிங் என்பது மருத்துவ சேவை மட்டுமல்லாது, நோய்வாய்ப்பட்ட மக்களை கவனிக்கும் ஒரு கலை. உன்னதமான பணியாக கருதப்படும் நர்சிங், குடும்பம், குழுக்கள், சமூகம், நோய்வாய்ப்பட்டோர், நலமாக உள்ளவர்கள் போன்றவர்களுக்கும் சேவை செய்யும் வாய்ப்பை உள்ளடக்கியது.

ஒரு மருத்துவமனையில், நோயாளிகளின் பராமரிப்புக்கு காரணமாக இருப்பவர்கள் நர்சுகள். மருத்துவமனையில், பொது வார்டில் தொடங்கி ஆபரேஷன் தியேட்டர் வரை, நர்சுகளின் பங்களிப்பு அதிகம். நர்சிங் துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவர், முதலில் நோயாளிகளின், படுக்கை அறையில் பணி செய்ய அனுமதிக்கப்பட்டு, நன்கு அனுபவம் பெற்ற பின்னரே சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நோயாளிகளிடம் அனுமதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, மனநோயாளிகள், குழந்தைகள், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களை கூறலாம்.

நர்சுகளின் பணி

ஒரு மருத்துவமனையில் அதிகமாக பணியாற்றுவது நர்சுகள். பெண்கள் அதிகளவில் ஈடுபடும் இத்துறையில், அவர்களது முக்கிய வேலை, நோயாளிகளுக்கு மருந்து அளிப்பது, அவர்களது உடல்நிலை, முன்னேற்றத்தை தொகுத்து வைப்பது, அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்வது, முன்னேற்பாடுகளை கவனிப்பது, நிர்வாகம், தினசரி பணிகளை மேற்கொள்வதே நர்சுகளின் பணி. இத்துறையில் உள்ளவர்கள், சிறந்த மனதைரியம், திறமையாக செயல்படுவது, நோயாளிகளிடம் சிறந்த கவனம், அவர்களின் தேவையை புரிந்து கொள்ளும் தன்மை போன்றவற்றை பெற்றிருப்பது அவசியம்.

வழங்கப்படும் படிப்புகள்

1. பி.எஸ்சி., நர்சிங் 4 ஆண்டு

2. எம்.எஸ்சி., நர்சிங் (மெடிக்கல் சர்ஜிக்கல்) 2 ஆண்டு

3. எம்.எஸ்சி., நர்சிங் (பீடியாட்ரிக்) 2 ஆண்டு

4. எம்.எஸ்சி., நர்சிங் 2 ஆண்டு

5. எம்.எஸ்சி., நர்சிங்

(நர்சிங் போஸ்ட் பேசிக் கோர்ஸ்) 2 ஆண்டு

6. டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் 3 ஆண்டு

கல்வித் தகுதி

பி.எஸ்சி., நர்சிங் படிக்க விரும்புவர்கள், பிளஸ் 2 வில் அறிவியல் மற்றும் ஆங்கிலம் அல்லது உயிரியல் மற்றும் கணிதத்தை முக்கிய பாடங்களாக ஏற்று, 45 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமா நர்சிங் படிக்க விரும்புவர்கள், பிளஸ் 2வில் 45 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வழங்கும் கல்வி நிறுவனங்கள்

இந்தியா, வெளிநாடுகளில் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இப்படிப்புகளை வழங்குகின்றன.

வேலைவாய்ப்பு

இத்துறையில் பட்டப்படிப்பை முடித்துவுடன், மருத்துவமனைகள், தனியார் கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள், அனதை, முதியோர் இல்லங்கள், மன நோய் கொண்டவர்கள், ராணுவம், பள்ளிகள், அலுவலகம், தொழிற்சாலைகள், ரயில்வே, அரசு நிறுவனங்கள், நர்சிங் பயிற்சி நிறுவனங்களில் ஆசிரியர் பணிகளில் ஈடுபடலாம்.

கிடைக்கும் சம்பளம்

இத்துறையில் புதிதாக நுழையும் ஒருவர், மாதம் 8,000 முதல் 15,000 ரூபாய் வரை மாதச்சம்பளம் பெறலாம். உங்களது அனுபவம், திறமையை பொறுத்து மேலும் சம்பளம் உயரும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us