எம்.பி.ஏவில் சேரவிருக்கிறேன். பிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்கவில்லை. இப்படிப்புக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா? | Kalvimalar - News

எம்.பி.ஏவில் சேரவிருக்கிறேன். பிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்கவில்லை. இப்படிப்புக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா? ஆகஸ்ட் 30,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

கணிதத்தை பிளஸ் 2வுக்குப் பின் படிக்கவில்லை என்பது ஒரு பிரச்னையே அல்ல. பிளஸ் 2 தரத்திலேயே கணித பகுதி அமைவதை மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை பார்த்தால் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே இதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டியதில்லை. கணிதம், ஆப்டிடியூட், பொது அறிவு, பகுத்தாராயும் திறன் ஆகியவற்றில் நீங்கள் போதிய பயிற்சி செய்வது அவசியமாகும். மேட், கேட், ஜிமேட் என எம்.பி.ஏ., படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் சேரவிரும்பும் நிறுவனத்தைப் பொறுத்து நடத்தப்படுகின்றன. குறைந்தது 3 மாதமாவது இத்தேர்வுகளுக்காகத் தயாராக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் மதுரை போன்ற பெரிய நகரங்களில் இத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us