ஒரு டெக்ஸ்டைல் பொறியாளரின் பணி நிலைகள் | Kalvimalar - News

ஒரு டெக்ஸ்டைல் பொறியாளரின் பணி நிலைகள்

எழுத்தின் அளவு :

பாரம்பரிய டெக்ஸ்டைல் தொழிலானது, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, நமது தேவையை நிறைவு செய்கிறது. சதாரண முறையிலான உடைகள் மற்றும் வீட்டு அலங்காரம் என்பவற்றை கடந்து, டெக்ஸ்டைல் துறையானது, தனது முன்னேற்ற பயணத்தில் வெகுதூரம் சென்றுவிட்டது.

உலகளவில், சுற்றுலா மற்றும் ஐ.டி., துறைகளையடுத்து, டெக்ஸ்டைல் துறை மூன்றாவது பெரிய துறையாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, இத்துறைக்கான எதிர்கால வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. நுட்பமான டெக்ஸ்டைல் இயந்திரங்களைக் கையாள, தரமான மற்றும் தகுதிவாய்ந்த டெக்ஸ்டைல் பொறியாளர்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள்.

டெக்ஸ்டைல் பொறியாளரின் பணிகள்

ஒரு டெக்ஸ்டைல் பொறியாளர், அனைத்துவிதமான டெக்ஸ்டைல் இயந்திரங்கள் மற்றும் தயாரிப்புகள் ஆகியவற்றோடு தொடர்புடையவராக இருக்கிறார். ராணுவத்தினருக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் தேவைப்படும் bulletproof ஜாக்கெட்டுகள் முதல் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தேவைப்படும் உடைகள் மற்றும் கார்கள், ரயில்கள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஆட்டோமோடிவ் டெக்ஸ்டைல் தயாரிப்புகள் வரை பலவிதமான துணி வகைகளையும் தயாரிக்கும் திறனை, ஒரு டெக்ஸ்டைல் பொறியாளர் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ சேவையில், டெக்ஸ்டைல் துறையின் பயன்பாடு, இன்று மிகவும் நவீன வகையில் அதிகரித்துள்ளது. டெக்ஸ்டைல் என்பது தற்போது மெட்டீரியலாக மாறியுள்ளது மற்றும் artificial organs தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, டெக்ஸ்டைல் பொறியாளர்கள், உருவாக்கும் மெட்டீரியல்கள், உடம்பிற்குள், தற்காலிக அல்லது நிரந்தர முறையில் பொருத்தப்படுகின்றன.

டெக்ஸ்டைல் தொழில் குடும்ப பின்புலத்திலிருந்து வரும் மாணவர்கள், தங்களின் தியரி மற்றும் நடைமுறை பொறியியல் அறிவை, வியாபாரத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து கொள்கிறார்கள். எனவே, டெக்ஸ்டைல் பொறியாளர்கள், உச்சபட்ச தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய Plant -களை உருவாக்கும் திறனைப் பெற்றுள்ளார்கள்.

பணி தன்மைகள்

டெக்ஸ்டைல் பொறியியலில் பி.டெக்., முடித்தவுடன், ஒருவர் பல்வேறு நிலைகளில் தனது பணிக்கான வாய்ப்புகளைத் தேடலாம். ஒரு டெக்ஸ்டைல் பிளான்டில் டெக்னிக்கல் சர்வீஸ் அசிஸ்டன்டாகவும், மேனுபேக்சரிங் யூனிட்டில், சேல்ஸ் இன்ஜினியர் மற்றும் குவாலிட்டி கன்ட்ரோல் பயிற்சி பெறுபவராகவும், டிசைன் ஸ்டுடியோவில் உதவி டிசைனராகவும், ஷோரூம் அல்லது ஆய்வகத்தில் ப்ராடக்ட் மேம்பாட்டு எக்ஸ்கியூடிவாகவும், பிளான்டில், பேப்ரிக் டெவலப்மென்ட் எக்ஸிகியூடிவாகவும் பணிக்கு சேரலாம்.

மேற்கூறியபடி பார்க்கும்போது, ஒரு டெக்ஸ்டைல் இன்ஜினியரின் பணி என்பது, பல்வேறான பரந்த அம்சங்களைக் கொண்டது என்பதை அறிந்துகொள்ளலாம்.

சம்பளம்

படித்து முடித்து புதிதாக பணிக்கு சேரும் ஒருவர், தொடக்கத்தில், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் பெறலாம். ஆரம்பத்தில் அதிகளவு சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், அனுபவம் கூட கூட, உங்களின் சந்தை மதிப்பும், சம்பளமும் கூடிக்கொண்டே செல்லும் என்பதை மறக்கக்கூடாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us