பாங்க் கிளார்க் மற்றும் பி.ஓ., வேலைகளுக்காக இப்போது தயாராகி வருகிறேன். பி.ஓ., பணிக்கான தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும் என நண்பர்கள் கூறுகிறார்கள். அடிப்படையில் பி.எஸ்சி., முடித்திருக்கும் என்னால் வெற்றி பெற முடியுமா? | Kalvimalar - News

பாங்க் கிளார்க் மற்றும் பி.ஓ., வேலைகளுக்காக இப்போது தயாராகி வருகிறேன். பி.ஓ., பணிக்கான தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும் என நண்பர்கள் கூறுகிறார்கள். அடிப்படையில் பி.எஸ்சி., முடித்திருக்கும் என்னால் வெற்றி பெற முடியுமா?டிசம்பர் 01,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகக் கடினமாக உணரப்பட்ட பி.ஓ., போட்டித் தேர்வுகள் இப்போது சற்றே குறைந்திருக்கும் போட்டியை உள்ளடக்கியுள்ளன. முன்பெல்லாம் தென்னிந்தியாவின் 4 மாநிலங்களிலிருந்து 2 அல்லது 3 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இப்போதோ மதுரை போன்ற நகரங்களில் இருந்தே 10 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐ.டி. துறையின் அபார வளர்ச்சிக்குப் பின் பாங்குகளில் பணியாற்ற விரும்புவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்திருப்பதே இதன் காரணம். பி.ஓ. போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் தரம் குறையவில்லை.

ஆனால் போட்டியின் கடுமை குறைந்திருக்கிறது. எனவே 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே உங்கள் நண்பர்கள் கூறுவதை நம்பாமல் உடனே உங்கள் இலக்கு நோக்கி பயணத்தைத் தொடங்கவும். உறுதியாக வெற்றி கிடைக்கும்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்டேட் பாங்க் கிளார்க் பணிக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஸ்டேட் பாங்க் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ரீசனிங், கணிதம் போன்ற பகுதிகளுக்கான தகுதி மதிப்பெண்களைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.

50க்கு 6 மதிப்பெண்கள் எடுத்தால் அந்தப் பகுதியில் தகுதி பெறலாம் என்பதாக மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.வரும் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் பணியிடங்கள் பொதுத் துறை வங்கிகளில் நிரப்பப்படவுள்ளன என்பதால் 6 மாதங்கள் வரை இந்தத் தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள் அனைவருக்குமே பொதுத் துறை வங்கிகளில் கட்டாயப் பணி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்து தயாராகுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us