வேளாண் ஜெனடிக்ஸ் படிப்பில் ஆர்வமா? | Kalvimalar - News

வேளாண் ஜெனடிக்ஸ் படிப்பில் ஆர்வமா?

எழுத்தின் அளவு :

விவசாயிகள், அதிக விளைச்சல் வேண்டி, எளிதில் நோய் தாக்கும் விதைகளை தேர்வு செய்கின்றனர். ஆனால், நோய் தடுக்கும் திறனுள்ள, அதேசமயம் சற்று குறைவான விளைச்சலுள்ள விதைகளைத் தேர்வு செய்ய தயங்குகின்றனர். அவர்களின் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதிக விளைச்சல் மற்றும் நல்ல நோய் எதிர்ப்பு ஆகிய இரண்டையும் ஒருங்கே பெற்ற பயிரை தேர்வுசெய்ய, ஜெனடிக்ஸ் அறிவியல் துறை உதவுகிறது. வேளாண் உலகில், ஜெனடிக்ஸ் துறை பலரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது. இதன்மூலம், பயிரின் தரம் மற்றும் வகைகள் அதிகப்படுத்தப்படுகின்றன.

கடந்த 1947ம் ஆண்டில், இந்தியாவில், 5 கோடி டன்களுக்கும் குறைவான பயிர் உற்பத்தியே நடைபெற்றது. ஆனால், இன்று, அந்த அளவு 26 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவைத் தவிர, இந்த 60 ஆண்டுகளில், இந்தளவு உணவு உற்பத்திப் பெருக்கத்தை அதிகரித்த நாடுகள் வேறு எதுவுமில்லை என்று கூறப்படுகிறது. ஜெனடிக்ஸ் நிபுணர் plant breeders என்றும் அழைக்கப்படுகிறார்.

நோய் தடுப்பு, வறட்சி தாங்குதிறன் மற்றும் நல்ல அறுவடை ஆகியவற்றுக்கு ஜெனடிக்ஸ் துறை முக்கியத்துவம் கொடுக்கிறது.

இத்துறையில் நுழைதல்

ஒரு மாணவர், பயாலஜி அல்லது வேளாண்மை ஆகிய பிரிவுகள் மற்றும் அது தொடர்புடைய பிரிவுகள் ஏதேனுமொன்றில், பி.எஸ்சி., முடித்திருந்தால், அவர், ஜெனடிக்ஸ் அல்லது செடி உருவாக்கம்(plant breeding) ஆகிய பிரிவுகளில், எம்.எஸ்சி., வேளாண்மை முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளலாம்.

பல வேளாண் பல்கலைக்கழகங்கள், ஜெனடிக்ஸ் துறையில் முதுநிலைப் படிப்புகளை வழங்குகின்றன. இப்படிப்பில், தனித்துவமான ஜெனடிக் கோடுகளை எப்படி மதிப்பாய்வு செய்வது, ஜீன் expression மற்றும் ஜெனடிக் interaction உள்ளிட்ட அம்சங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

டாக்டோரல் மற்றும் போஸ்ட் டாக்டோரல் பட்டங்கள், தனியான ஆராய்ச்சியை மேற்கொள்ள உங்களுக்கு உதவி புரிகின்றன. Fulbright and Japanese government fellowships போன்ற உதவித்தொகைகளின் மூலமாக, மாணவர்கள் பலர், வெளிநாடுகளில் போஸ்ட் டாக்டோரல் படிப்புக்கு விண்ணப்பிக்கின்றனர்.

விதை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு

இப்படிப்பை முடித்த ஒருவர், geneticist, plant variety specialist, statistical geneticist or plant breeder போன்ற பணி நிலைகளை அடைய முடியும். மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மார்க்கெடிங், தரக் கட்டுப்பாடு, இனப்பெருக்க மற்றும் உற்பத்தி ஆகிய துறைகள் உள்ளன.

ஒரு முதுநிலைப் பட்டதாரி, ஆண்டிற்கு ரூ.5 முதல் ரூ.6 லட்சம் வரை எதிர்பார்க்கலாம். அதேசமயம், பிஎச்.டி., முடித்தவர், ஆண்டிற்கு ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை எதிர்பார்க்கலாம்.

பொதுவாக, ஜெனடிக்ஸ் நிபுணர்கள், விதை, பயோடெக்னாலஜி, உணவு மற்றும் பார்மசூடிகல் நிறுவனங்களின் ஆராய்ச்சிப் பிரிவுகளில் பணிபுரிந்து கொண்டிருப்பார்கள். பலர், வேளாண் விஞ்ஞானிகள் பணியமர்த்தும் வாரியத்தில்(Agricultural scientist recruitment board), பணிக்காக முயற்சி செய்வார்கள்.

படிப்பு

M.Sc (Agriculture) in genetics & plant breeding

படிப்பை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்

Indian agricultural research institute, Delhi
SHIATS
Deemed university Allahabad
University of Kerala, Thiruvananthapuram
Madurai kamaraj university
University of Kolkatta

பணி நிலைகள்

Geneticist, Evolutionary genomics scientist, Plant variety specialist, Statistical geneticist, Research scientist, Plant breeder or Plant pathologist.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us