பால்வள தொழில்துறையில் உங்களுக்கான வாய்ப்புகள் | Kalvimalar - News

பால்வள தொழில்துறையில் உங்களுக்கான வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக திகழும் இந்தியா, உலகின் மொத்த பால் உற்பத்தியில் 16% பங்களிப்பைக் கொண்டுள்ளது.

அதிகரிக்கும் வாழ்க்கை வசதிகள், நகர்மயமாதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவை, இந்தியாவில், முறைப்படுத்தப்பட்ட பால்வளத் துறையின் வளர்ச்சியை, ஆண்டிற்கு 15%-20% வரை அதிகரிக்கின்றன.

இந்தியாவின் பால் உற்பத்தி, ஆண்டிற்கு 5% அதிகரித்து வருகிறது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சாத்தியக்கூறுகளைக் காணுகையில், இதர பிற துறைகளைவிட, சிலருக்கு, பால்வளத்துறையின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. ஏனெனில், மக்கள் இன்று, பாக்கெட்டுகளில் விற்கப்படும் பால் உள்ளிட்ட இதர பால் பொருட்களை அதிகளவில் வாங்குகின்றனர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பால்வளத்துறையின் பங்கு 6%. இந்த துறையில் வீழ்ச்சி மற்றும் இறக்கம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், பால் இல்லாமல், மனிதனின் அன்றாட வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பது கடினம்.

எம்.டெக்., டெய்ரி டெக்னாலஜி படிப்பு

இப்படிப்பு, பி.டெக்., படிப்போடு ஒப்பிடுகையில், சற்று மாறுபட்ட ஒன்றாகும். பால் ப்ராசஸிங் மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள் தொடர்பானதாகும் இந்தப் படிப்பு. இதுவொரு தனித்துவமான படிப்பாகும். ஏனெனில், குறிப்பிட்ட தயாரிப்பு பொருட்கள் மற்றும் அதன் ப்ராசஸிங் தொடர்பான விஷயங்கள் தொடர்பாக, இப்படிப்பு கவனம் செலுத்துகிறது.

அதேசமயம், பி.டெக்., படிப்பு, பால் சேகரிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த அதன் ப்ராசஸிங் மற்றும் பல்வேறான பால் பொருட்கள் தயாரிப்பு, பால் பொருட்கள் தொடர்பான வேதியியல் மற்றும் மைக்ரோபயாலஜி துறைகளில் சிறப்பு கவனம் மேற்கொள்ளுதல், அப்பொருட்களை தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்தலில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் ஆகியவை தொடர்பானதாகும்.

மாணவர்கள் கற்றுக்கொள்வது என்ன?

டெய்ரி தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், பால் மற்றும் பால் பொருட்களின் உயிர்சிதை மாற்றம், சவ்வு தொழில்நுட்பம், ஆரோக்கிய உணவுகளின் நன்மைகள், பால் மற்றும் தொடர்புடைய பொருட்களின் உணர் மதிப்பாய்வு மற்றும் சிலவகை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நுட்பங்கள் ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

என்னென்ன அம்சங்கள்?

அனிமல் பயோடெக்னாலஜி, விலங்கு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, பண்ணை விலங்குகள் உற்பத்தி பெருக்கம் ஆகியவற்றுக்கு உதவி புரிகிறது. மேலும், embryo, genomics and proteomics ஆகியவைப் பற்றிய படிப்பை இது உள்ளடக்கியதாகும். பண்ணை விலங்கு குளோனிங் என்பது, விலங்குகளுக்கு உணவளிக்கும் ப்ரோகிராம்களை மேம்படுத்துகிறது மற்றும் கால்நடைகளுக்கென்று ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் உயர்தர உணவை உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

பணி வாய்ப்புகள்

இப்படிப்பை முடித்தப்பிறகு, ஒரு மாணவர், டெய்ரி கம்பெனிகள், பால்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், பால் சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் டெய்ரி பிளாண்டுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிக்கு சேரலாம்.

பணி நிலைகள்

ஒரு தயாரிப்பு யூனிட் என்று எடுத்துக்கொண்டால், இப்படிப்பை முடித்தவர், தயாரிப்பு மேலாளராக ஆகி, டெய்ரி பிளான்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தியை மேற்பார்வையிடுகிறார்.

அதேசமயம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தொடர்பான நிறுவனங்களில், குவாலிட்டி கன்ட்ரோல் அதிகாரி மற்றும் quality assurance officer and research and development manager போன்ற பணிநிலைகளைப் பெறுகிறார். ஒரு குவாலிட்டி நிபுணராக, flavour, body texture, chemical and microbiology quality of the product ஆகியவற்றை அவர் சோதிக்கிறார். மேலும், procurement பிரிவாக இருந்தால், procurement மேலாளராக பணியாற்றுவார்.

சவால்கள்

பால் பொருட்கள், தரமான முறையில், சுகாதாரமாக தயாரிக்கப்படுவதை உறுதிசெய்வதுதான், இத்துறையின் மிகப்பெரிய சவால். தரமான பாலை பெறுவது இந்தப் பணியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று.

ஒரு பொருள் தயாரிக்கப்படுகிறதென்றால், அதற்கான செயல்பாட்டு முறையை தெளிவாகத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அப்போதுதான், தேவையில்லாத இழப்புகளைத் தவிர்க்க முடியும்.

எம்.டெக்., டெய்ரி டெக்னாலஜி படிப்பை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்

* National dairy research institute, Karnal, Kerala
* Veterinary and Animal sciences university - Thiruvananthapuram
* Colleges of dairy science, Udaipur
* West Bengal university of animal and fishery sciences
* Faculty of dairy technology, Dairy science institute, Mumbai
* Jawaharlal Nehru Krishi vishwavidyalaya, Jabalpur
* Acharya NG Ranga agricultural university.

தகுதி

B.Tech., (Dairy science and Technology)

தேர்வு செய்யும் முறை

Entrance exam scores, Interview and extra curricular activities.

வேலை வாய்ப்பை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்

Manufacturers like Amul, Nestle, GSK, Mother Dairy, ITC, Britannia, Parle, Verka Dairy; Educational institutions.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us