உலகளாவிய எம்.பி.ஏ., படிப்பு | Kalvimalar - News

உலகளாவிய எம்.பி.ஏ., படிப்பு

எழுத்தின் அளவு :

ஒப்பீட்டளவில், இந்தப் படிப்பு செலவு மிகுந்தது. ஏற்கனவே, நடுத்தர மற்றும் சீனியர் நிலையில், ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நபர்களுக்கு இப்படிப்பு மிகவும் ஏற்றது.

இந்தப் படிப்பை, இந்தியாவில், ஒரு சில கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. இந்தியாவின் ஐ.ஐ.எம்., பெங்களூர் மற்றும் பிரிட்டன், கனடா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைச் சேர்ந்த தலா 1 பிரபல வணிகப் பள்ளிகள் இணைந்த கூட்டு முயற்சியின் மூலம், மேலாண்மை கல்வியில், International Masters Programme  in Practicing Management(IMPM) என்ற படிப்பு வழங்கப்படுகிறது.

இப்படிப்பை மேற்கொள்ள, ஒரு நபருக்கு 60,000 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன. இந்தத் தொகையில், பயணம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் உள்ளடங்காது. மாறாக, கல்வி மற்றும் Inter-modular support போன்றவை அடங்கும்.

பெங்களூரிலுள்ள கிறைஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் விர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகம் என்ற இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து, MBA-MS என்ற படிப்பை வழங்குகின்றன. இப்படிப்பிற்கு 14 முதல் 15 லட்சங்கள் செலவாகும்.

Krannert School of management of Purdue university, Universidad Puebla, Mexico, Tianjin University, China ஆகிய சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, ஐ.ஐ.எம்., உதய்ப்பூர், குளோபல் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் என்ற ஸ்பெஷலைசேஷனில் 15 மாத dual degree executive MBA படிப்பை வழங்குகிறது. அமெரிக்காவில் படிக்கும் காலத்திற்கான கட்டணம் 20 ஆயிரம் டாலராகவும், இந்தியாவில் படிக்கும் காலத்திற்கான கட்டணம் ரூ.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கேஸ் வெஸ்டர்ன் பல்கலையின், வெதர்ஹெட் மேலாண்மை கல்வி நிறுவனம், ஷாங்காயின் டோங்ஜி பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து, குளோபல் எம்.பி.ஏ., படிப்பை XLRI வழங்குகிறது. இந்த 3 நாடுகளின் 60 மாணவர்களும், தங்களின் முதல் பருவ படிப்பை டோங்ஜி பல்கலையிலும், இரண்டாம் பருவ படிப்பை XLRI கல்வி நிறுவனத்திலும், மூன்றாம் பருவ படிப்பை கேஸ் வெஸ்டர்ன் கல்வி நிறுவனத்திலும் மேற்கொள்வார்கள்.

அதேசமயம், நான்காம் பருவ படிப்பை, உள்ளூர் பட்டப்படிப்பு ரீதியான செயல்பாட்டுத் தேவைகளுக்காக, இந்த 60 மாணவர்களும், அவரவர் சொந்த நாடுகளுக்கே சென்று, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் மேற்கொள்வார்கள்.

இந்த 2 வருட படிப்பிற்கு மொத்தம் ரூ.25 லட்சம் செலவாகிறது. சமுதாயத்திற்கு நீடித்த பொருளாதார வளர்ச்சியை தரக்கூடிய உலகளாவிய தலைவர்களை இந்தப் படிப்பு உருவாக்கும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us