இன்டீரியர் டிசைனிங் துறை பற்றிக் கூறவும். | Kalvimalar - News

இன்டீரியர் டிசைனிங் துறை பற்றிக் கூறவும்.ஜூன் 18,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்டீரியர் டிசைனிங் என்பது கடந்த 10 ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ள துறையாக இருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் ஆர்க்கிடெக்டுகள் தான் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைனிங்கை பார்த்துக்கொண்டனர். ஆர்க்கிடெக்சர், புராடக்ட் டிசைன், என்விரான்மென்டல் சைகாலஜி, டெக்கரேசன் போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இன்டீரியர் டிசைனர்கள் குடியிருப்பு, வணிக வளாகம் என தேவைக்கேற்ப இன்டீரியர் டிசைன் செய்து அழகுணர்ச்சியோடு இருப்பிடத்தை மேம்படுத்துகிறார்கள். வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இவை வடிவமைக்கப்படுகின்றன.

 

கேட் எனப்படும் கம்ப்யூட்டர் எய்டட் டிசைன் போன்றவற்றை பயன்படுத்தி இன்று இன்டீரியர் டிசைனிங் மேற்கொள்ளப்படுகிறது. இன்டீரியர் டிசைனிங்கில் பொதுவாக 4 ஆண்டு பி.எப்.ஏ. படிப்பு தரப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள ஸ்கூல் ஆப் இன்டீரியர் டிசைன் இதில் 5 ஆண்டு தொழிற்படிப்பைத் தருகிறது. +2ல் கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் படித்திருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் பகுதி நேர டிப்ளமோ படிப்புகளை சில நிறுவனங்கள் தருகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us